Blog Archives - Naseema Razak
1
archive,category,category-blog,category-1,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

வெற்றி பெற்றவர்கள் கதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் யாரும் வெறும் தோல்வியை அல்ல, படு தோல்விகளைச் சந்தித்திருப்பார்கள். இப்போது சட்டென்று எனக்கு ஜாக் மா கதைதான் ஞாபகம் வருகிறது. அலிபாபா ஆன்லைன் ஷாப்பிங் பலருக்குத் தெரியும். அமேசான் என்கிற பெரிய சாம்ராஜ்யத்திற்கு நிகரா அலிபாபாவைச் சொல்லலாம். அதை ஆரம்பித்தவர் ஜாக் மா. பள்ளிக்குச் சென்றது முதல் ஜாக் மாவிற்குப் பரிசாகக் கிடைத்தது தோல்விகள் மட்டும்தான். ஆரம்பப் பள்ளியில் இரண்டு முறை தோற்றார். உயர்நிலைப் பள்ளியில் மூன்று முறை. கல்லூரியில் சேருவதற்காக எழுதிய நுழைவுத் தேர்வில் மூன்று முறை. காவல் துறையில் வேலை கிடைக்கவில்லை. தேர்வாகவில்லை. சரி, கே.ஃப்.சியில் எப்படியாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற கணக்கெல்லாம் கனவாகக் கலைந்து போனது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்குப் பத்து முறை விண்ணப்பித்துத் தோற்றுப் போனார். இந்தப் பட்டியல்...

வாழ்க்கைச் சம்பவங்களாலும் தொகுப்புகளாலும் ஆனது. இது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனா, நாம் எப்படி ஒவ்வொன்றையும் எதிர்கொள்ள வேண்டும் என்கிற தெளிவு எத்தனை பேருக்கு இருக்கிறது? அது தெரிந்திருந்தால் வெற்றி சுலபமாகிவிடும். வெற்றி ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் சூட்சுமம் அனைவருக்கும் ஒன்றே.” அதற்கு ஒரு சின்ன சூத்திரத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். சுலபமாகத் தெரியும் பல விஷயங்கள் சுலபமானதாக இருக்காது. இந்தச் சூத்திரமும் அப்படியே. E (Event- சம்பவங்கள்) + R (Response-கையாளும் திறன்) = O (outcome- விளைவு). பார்க்க 1+1 = 2 போலத் தெரியும், ஆனால் இதைப் புரிந்து கொள்ளச் சிறிது மெனக்கெடல் வேண்டும். சம்பவங்கள் என்பது வெறும் சம்பவங்கள் அல்ல. அது எண்ணமாகக்கூட இருக்கலாம். ஒரு விஷயம் நடக்கிறது, உதாரணத்திற்குப் போக்குவரத்து நெரிசலில் நீங்கள் மாட்டிக் கொள்கிறீர்கள். உங்கள் வண்டி அங்குலம் அங்குலமாக நகர்கிறது....

நாம் வாழும் இந்த டிஜிட்டல் யுகத்தில், தகவல் பகிர்வு என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. ஆனால், அனைத்தையும் பகிர்வது அவசியமா என்று நாம் யோசிப்பதில்லை. ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் போதே அதைப் பெரிதாகப் பேசிவிடுகிறோம். உளவியல் ரீதியாக இலக்குகளை, கனவுகளை நாம் பகிரும்போது, நமது மூளை அதை ஓரளவு சாதித்ததாக எடுத்துக் கொள்கிறது. இது நம் உந்துதலைக் குறைக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 2009இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தங்கள் இலக்குகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், அதை அடைவதற்கான முயற்சியில் ஆர்வம் செலுத்தவில்லை என்று கண்டறியப்பட்டது. அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். திருவள்ளுவர்கூட இதைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். இதைப் புரிந்து கொண்டு நடந்தாலே பாதிக் கிணற்றைத் தாண்டி விடலாம். கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். அதாவது, ஒரு செயலைச் செய்து...

பண்டைய சீனாவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன், தாவோயிச தத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் லாவோ ட்சூ (Lao Tzu) என்பவரால் Wu Wei என்கிற கருத்து முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 'Wu' என்றால் 'இல்லை' என்றும், 'Wei' என்றால் 'செயல்' என்றும் பொருள். ஆனால் இதன் ஆழமான பொருள் 'செயலின்மை' அல்ல, 'செயலற்ற செயல்பாடு' என்று பொருள். அதாவது ஒரு செயலைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது என்று அர்த்தம் இல்லை. மாறாக இயற்கையான ஓட்டத்துடன் இணைந்து செயல்படுவது என்று அர்த்தம். அதற்குச் சரியான உதாரணம் நதி. நதியைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். அது பாயும்போது, தனது பாதையில் வரும் பாறைகளை நேரடியாக எதிர்க்காது. சுற்றி ஓடும். ஆனால், இறுதியில் தன் இலக்கை அடையும். இது நதியின் குணமாக இருந்தாலும் நாமும் அதைப் பின்பற்றினால் இலக்கை சுலபமாக...

பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் இருந்தேன். அந்தக் கடையில் என்னையும் இன்னொரு பெண்ணையும் தவிர்த்து வேறு வாடிக்கையாளர்கள் இல்லை. அந்தப் பெண்மணி விக்ஸ் டப்பாவை கையில் வைத்து, கடைப் பயனிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். கடைப் பையன் மலையாளி. அவனுக்கு அவர் கேட்பது புரியவில்லை. அவருக்கு அவன் பேசுவது புரியவில்லை. அந்தம்மா வங்காள மொழியில் பேசிக் கொண்டிருந்தார் என்று மட்டும் எனக்குத் தெரிந்தது. சரியாகப் புரியாவிட்டாலும், விக்ஸ் டப்பாவை என் கையில் வாங்கினேன். மூக்கை உறிஞ்சுவது போல், தொண்டை வலிப்பது போல் சைகை செய்தேன். “ஓ…சொர்தி?” என்று சொல்லிக் கொண்டு அதை எடுத்த இடத்தில் வைத்தார். முதலில் தனது கழுத்தைத் தொட்டு ஏதோ சொன்னார். பிறகு முதுகு, இடுப்பு என்று எங்கெல்லாம் வலிக்கிறதோ அங்கெல்லாம் அவர் கை தானாகச்...

 ஜப்பானின் ஹைக்கூ கவிதைகள் பிரபலமானது போல் நம்மிடையே ‘கமன்’ பிரபலமாகவில்லை. இது ஜப்பானியக் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு தத்துவம். வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு முழுமையான அணுகுமுறை என்றும் சொல்லலாம். எதிர்பாராத ஒன்று நடக்காமல் இருப்பதில்லை. ஏதோ ஓர் இழப்பு, ஒரு துரோகம், தோல்வி என்று அவ்வப்போது நம்மை உண்டு இல்லை என்று செய்துவிடுவது வாழ்க்கையின் இயல்பு. அப்படி ஒன்று நடக்காமல் தடுக்க நம் யாராலும் முடியாது. ஆனால், அதை எப்படிக் கையாள வேண்டும் என்கிற முடிவும் தேர்வும் நம்முடையது. பொறுமையாக அந்த விஷயத்தை எதிர்கொள்வது, காத்திருப்பது என்று கமனைச் சுருக்கிக் கொள்ள இயலாது. நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, சூழ்நிலைகளை அமைதியாக எதிர்கொள்ளும் திறனைக் கமன் கற்றுத் தருகிறது. தற்காலிக இன்பதுன்பங்களைத் துறந்து நீண்டகால இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் ஒரு மனநிலையை ’ கமன்’ தரும். நம் மனம் கவலைகளைப் பெரிதுபடுத்திப் பார்க்கும் இயல்புடையது. அந்த இயல்பிலிருந்து விடுவித்துக் கொள்ள கமன் அவசியம். அது மட்டுமல்ல, கமன்...

நம்மில் பலர் நான் சொல்லப் போகும் கதையைக் கேட்டிருப்பீர்கள். இருந்தாலும் இங்கு அதை ஞாபகப் படுத்துவது சரியாக இருக்கும். ஒரு கோப்பையில் பாதி அளவு காபி இருக்கிறது. ஆனால் எனக்குத் தர்ப்பூசணி ஜூஸ் குடிக்க வேண்டும். அதே கோப்பையைத்தான் உபயோகிக்க வேண்டும். அப்படியென்றால், மீதி இருக்கும் காபியைக் குடித்து கோப்பையைக் காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆறிவிட்ட காபியில் சுவை ஒன்றும் இருக்காது என்று கொட்டிவிட்டு, அதைச் சுத்தம் செய்ய வேண்டும். இதை எதையும் செய்யாமல் பாதி காபி இருந்த கோப்பையில் மேலும் ஒரு கோப்பை அளவு தர்ப்பூசணி ஜூஸை ஊற்றினால் என்ன ஆகும்? அது குடிப்பதற்கு லாயக்கற்றுப் போகும். நம்மில் பலர் பழைய ஏதோ ஒன்றின் மிச்சத்தை வைத்துக் கொண்டுதான் புதிய விஷயங்களை, செயல்களை அணுகுகிறோம். ஒன்று, என் வயதுக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணம்....

பல வருடங்களுக்குப் பின் இதை மீண்டும் கையில் எடுத்தேன். கிரெசண்ட் கல்லூரியில் எம்.சி.ஏ முடிக்கும் இறுதி ஆண்டு சிறந்த ப்ரோஜெக்ட்காக முதல் இடம் கிடைத்தது. அதற்கு விழா வைத்துத் தங்கப் பதக்கம் கொடுத்தார்கள். முதல் ரேங் எடுக்கும் மாணவி அல்ல நான். ஆனால் முயற்சிகளுக்கு என்றும் முற்றுப் புள்ளி வைத்ததில்லை. ஐந்தாவது செமெஸ்டரில் ஐ.டி.சி பேப்பரில் அரியர் வந்துவிட்டது. அதுவரை நோ ஹிஸ்ட்ரி ஆப் அரியர்ஸ் என்ற சிறப்புக்குக் கீழ் என் பெயரும் இருந்து வந்தது. அரியரால் பல சிறந்த நிறுவனங்களின் ப்ளேஸ்மெண்டை தவற விட்டேன். ஒவ்வொரு நாளும் என் ஆசிரியர் ஆன்ஜலினா என்னை அழைத்து சமாதானப் படுத்துவார். என்னை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நாலா பக்கமும் நண்பர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். எதுவும் என்னை லேசாக்கவில்லை. ஒவ்வொரு இரவும் துபாயிலிருக்கும் அப்பாவிடம் இருந்து போன் வரும். அப்பா குரலைக் கேட்டவுடன்...

சதுப்புநிலமாக இருந்த இடம், காய்ந்து, வெடித்து, பல மாற்றங்களுக்குப் பிறகு பரந்த பாலைவனமானது. நாடோடிகள் முதலில் கூடாரம் அமைத்துப் பார்த்தார்கள். ஆனால் வாழ முடியாமல் பின்பு வேறு இடம் தேடிச் சென்றுவிட்டார்கள். இந்தப் பாலைவனத்தின் முதல் தலைமுறை மைந்தர்களாக வந்தவர்கள் பனியாஸ் மக்கள். இன்றும் துபாயை ஆண்டு கொண்டு இருப்பவர்கள் பனியாஸ் பழங்குடி இனத்தவர்கள். மத்தியக் கிழக்கில் உள்ள நாடுகளுக்கெல்லாம் எண்ணெய் வளத்தை அள்ளிக் கொடுத்த இறைவன் துபாய்க்கு மட்டும் கிள்ளித்தான் கொடுத்தான். ஆனால் ஏராளமாக எண்ணெய் வளம் உள்ள நாடுகளெல்லாம் பின் தங்கி நிற்க, துபாய் மட்டும் விண்ணளாவ வளர்ந்து நின்றது எப்படி? அரபு மண்ணில் எங்கு கால் வைத்தாலும் ஏதோ ஒரு பிரச்னை. ஏதேதோ அரசியல், அக்கப்போர்கள், உள்நாட்டுப் போர்கள். துபாய் மட்டும் எப்படி எப்போதும் சொர்க்கபுரியாகவே இருக்கிறது?...