My Books - Naseema Razak
15275
page-template,page-template-full_width,page-template-full_width-php,page,page-id-15275,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive

Books by Naseema Razak

மௌலா / Mowla

‘மௌலா’வை எழுதி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. அதற்கு பிறகு எழுதிய ஐந்து நூல்களும் வெளிவந்துவிட்டன. ஆனால் மெளலா தனக்கான நேரத்தை தானே தேர்ந்தெடுத்திருக்கிறான்.
சொர்க்கத்தின் பேரெழிற் பூங்காவில் தெய்வீகத்தின் நறுமணத்தைப் பரப்பப் புறப்பட்டுவிட்டான். ஏந்தி முகரத் தயாராகுங்கள்.மௌலாவை நினைத்து தாகித்து இருக்கும் ஒவ்வொருவருக்குமான புத்தகம் இது.

துபாய் விசா – நூல் 1 / Dubai Visa -1

மெட்ராஸ் பேப்பரில் (www.madraspaper.com) தொடர்ந்து துபாய் நிலத்தையும் மக்ளையும் பற்றி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து துபாய் நூல் 1 என்று கிண்டிலில் முன்பே வெளிவந்தது.
அதற்கு வாசகார்கள் தந்த வரவேற்பு உற்சாகம் அளித்தது. மேலும் பல சுவாரஸ்யமான கட்டுரைகளை துபாய் விசா நூல் 2 இல் தொகுத்துள்ளேன்.
நீங்கள் அறியாத துபாயை இதில் அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.

துபாய் விசா 2 / Dubai Visa 2

துபாய் என்றதும் வானளாவிய கண்ணாடிக் கட்டடங்களும், புரூஜ் கலீபா, டெஸர்ட் சபாரி, பெல்லி டான்ஸ், தங்கம் மற்றும் பெரிய மால்கள் ஞாபகத்துக்கு வரும்.
ஆடம்பரமும் பிரமிப்பும் சூழ்ந்த துபாயில் ஆச்சரியமும் பழமையும் எளிமையும் கூடிய இடங்களும் மக்களும் உண்டு.
மெட்ராஸ் பேப்பரில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வாசகர்களுக்காக கிண்டில் புத்தக வடிவில் தந்துள்ளேன். நீங்கள் கேள்விப்பட்ட துபாயைவிடப் பல ஆச்சரியங்கள் கொண்டது இந்தப் புத்தகம்.

தளிர் / Thalir

ஒரு கடவுளைப் போலவோ, குழந்தையைப் போலவோ சிந்திக்க முடிந்துவிட்டால் மனித வாழ்வில் சிக்கல்கள் அதிகம் இராது. துரதிருஷ்டவசமாக நாம் காலம் முழுதும் இரு நிலைகளுக்கு இடையில் வாழ்ந்து கடந்துவிடுகிறோம்.
ஆனால் ஒரு கடவுளின் சிரமங்கள் எப்படிப்பட்டவை என்று யாருக்குத் தெரியும்? குழந்தைகளின் அலையடிப்புகளைத்தான் நாம் பூரணமாக அறிந்திருக்கிறோமா? இந்நாவல், கடவுளின் விரலைப் பிடித்துக்கொண்டு குழந்தையின் மனத்தை வரைந்தெடுக்கப் பார்க்கிறது.
திருக்கோவிலூரில் பிறந்த நஸீமா ரஸாக், மெட்ராஸ் பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக உள்ளார். என்னைத் தேடி, மராம்பு என இரண்டு நாவல்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. ஹீலிங்-தியான ஆசிரியர். வசிப்பது துபாயில். வாழ்வது எழுத்தில்.

சூஃபி ஆகும் கலை / Sufi Aagum Kalai

ஜென், சூஃபியிஸம் போன்றவை தத்துவங்களே என்றாலும் வாழ்வோடு மிக நேரடித் தொடர்புடையவை. வாழ்வுடன் தொடர்புடையவற்றைக் கதைகள் வழி புரிந்துகொள்வதுதான் எளிது. இந்தப் புத்தகம், புராதனமான சூஃபி கதைகளின் மூலம் ஒரு சூஃபியாக வாழும் கலையைக் கற்றுத் தருகிறது.
சூஃபியாக வாழ்ந்தால் என்ன கிடைக்கும்? அது வாழ்ந்து பார்த்துவிட்டு நீங்கள் சொல்ல வேண்டியது.
திருக்கோவிலூரில் பிறந்த நஸீமா ரஸாக், மெட்ராஸ் பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக உள்ளார். என்னைத் தேடி, மராம்பு என இரண்டு நாவல்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. ஹீலிங்-தியான ஆசிரியர். வசிப்பது துபாயில். வாழ்வது எழுத்தில்.

மராம்பு / Maraambu

கனவுகளுடன் அமீரகம் வரும் பல பெண்களை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். வீட்டு வேலை, ஓட்டுனர் வேலை, அழகு நிலைய வேலை என்று கிடைத்த வேலைகளைச் செய்து தனிமையே துணையாக தன் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் இம்மராம்பு சமர்ப்பணம். – நசீமா ரசாக் கடல் கடந்து செல்லும் ஆண்களின் பாடுகளை விட தன் குடும்பத்திற்காக மொழி தெரியாமல், நிலம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் எதையும் அறியாமல், துணை இல்லாமல் துணிந்து பொருளாதாரச் சுமைகளுக்காக அமீரகம் வரும் பெண்கள் எதிர்கொள்ளும் பாதை சவால்கள் நிறைந்தது. எல்லாவற்றையும் சகித்தபடி அயல்தேசத்தின் பிரம்மாண்டங்களுக்குள் தங்களைப் பொருத்திக்கொள்ளும் சில பெண்களின் கதைகள் ஒன்றொடொன்று ஊடாடுகிறது.

என்னைத் தேடி / The Search

இன்றைய நவீன உலகில் பலபரிமாணங்களோடும், பொறுப்புகள் பல சுமந்தும் பரபரப்பாய் இயங்கி வரும் நவயுக நாயகிகள் எல்லாம் இருந்தும், வெறுமையே மிஞ்சி தம்மை தொலைத்தவர்களாய் இருப்பதை காண்கிறோம்…. இக்கதையில் வரும் நாயகி கயலும் அப்படித்தான்.தொலைத்த தன்னை மீட்டெடுக்க அவள் தொடங்கிய தேடலின் விளைவாய் … விடையாய்… அவளுக்கு கிடைத்த அரிய செல்வத்தை, அனுபவ அறிவை நம்முடன் பகிர விழைகிறாள் ‘என்னை தேடி’ என்னும் இவ்வழகிய படைப்பில். அலுவல்,அடுப்படி என்று அன்றாட அவசர வாழ்வியலில் தம்மை இழந்து இயந்திரமாய் இயங்கி வரும் பெண்களுக்கோர் வழிகாட்டியாய், வரப்பிரசாதமாய் அமையும் இந்நூல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

The Search

In today’s modern world, despite all the new age heroines who are busy with many dimensions and carrying many responsibilities, we see that they have lost themselves beyond emptiness.

Kayal, the heroine of this story, is the same. As a result of her search to recover her lost self, she wants to share the rare wealth and experience she got with us in this classic work called ‘The Search’.

There is no doubt that this book will be a guide and a boon for women who lose themselves in the daily rush of work and work.