Blog Archives - Page 3 of 4 - Naseema Razak
1
archive,paged,category,category-blog,category-1,paged-3,category-paged-3,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

நான் வசிக்கும் இடங்களில் என்னைச் சுற்றி இயற்கையின் வண்ணங்களை வைத்துக் கொள்வது பிடிக்கும். இதற்காகப் பெரிய மெனக்கெடல்கள் செய்வது இல்லை. வீட்டின் வரவேற்பறையில் ஒரு பக்கம் மணி ப்ளாண்ட் படர்ந்து பச்சைப் பசேல் என்று இருக்கும். இன்னொரு பக்கம் மீன் தொட்டியில் நான்கு தங்க நிற மீன்கள் நீந்திக் கொண்டு இருக்கும்.அப்படியே அதன் எதிர் புரத்தில் இருக்கும் கூண்டில் இரண்டு பட்ஜி பறவைகள் கொஞ்சிக் கொண்டிருக்கும். பால்கனியில் மல்லி, கற்றாழை, இட்லி பூ போன்ற செடிகள் சலசலவென்று வளர்ந்து இருக்கும். துபாய் வெயிலுக்குக் காப்பாற்றக் கூடிய செடிகள் இவை மட்டுமே. ஒரு நாள் படர்ந்த கொடியின் நடுவில் ஒரு கூட்டை மாட்டி வைத்தேன். வருடத்தில் குறைந்தது இரண்டு ஜோடிப் பறவைகள் குஞ்சு பொரித்துச் செல்லும் இடம் என் பால்கனி. இந்த வருடமும் அதற்குக் குறைவில்லை. கூட்டை வைத்த...

துபாய் என் புகுந்த வீடு. இந்த வீட்டுக்கு நான் ஒரு நல்ல மருமகள். இங்கு வந்த காலம் முதல் நான் பார்க்கும்-என்னை பாதிக்கும் ஒவ்வொன்றையும் மெட்ராஸ் பேப்பரில் அவ்வப்போது எழுதி வருகிறேன். இந்தக் கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்துப் படித்துப் பார்க்கும்போதுதான் ஒரு நிலப்பரப்பு நம்மையறியாமல் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் எப்படிப்பட்டது என்பது புரிகிறது. என்னுடைய துபாய் கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. இந்த தேசத்தை இது உங்களுக்குச் சரியான விதத்தில் அறிமுகப்படுத்தும் என்று நினைக்கிறேன். இன்னொரு தொகுப்பு விரைவில் வரும். இது ஒரு சிறிய தொடக்கம் மட்டுமே. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதினால் மகிழ்வேன். கிண்டிலில் புத்தகம் உள்ள பக்கத்தின் லிங்க், கீழே கமெண்ட்ஸில் உள்ளது. https://www.amazon.in/dp/B0BXQ2K779 ...

பயணம் செய்யும்போது பல முறை மயானங்களைக் கடந்து இருக்கிறேன். ஒருவிதமான அச்சம்தான் அப்பொழுது இருந்தது. ஒரு வேளை அன்றைய வயது காரணமாக இருந்திருக்கலாம். சமீபத்தில் எங்கள் நெருங்கிய உறவினர் காலம் சென்றார். மிகச் சாந்தமான நல்ல மனிதர். அவ்வப்போது அவரை நினைத்துக்கொள்வதும் உண்டு. இன்றோடு நாற்பது நாள் முடிந்தது. அவர் சாந்தி கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்ய ரஸாக் கிளம்ப, நானும் சேர்ந்துகொண்டேன். மயானத்திற்கு வெளியில், வண்டியில் என்னை காத்திருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் உள்ளே சென்றார். பழைய கார்களின் உதிரிப் பாகங்கள் விற்கும் கடைகள் வரிசையாக இருந்தன. சிறிது நேரத்தில் திரும்பியவர், “பெண்களும் உள்ளே வரலாமாம்" என்று சொல்ல,மயானத்திற்குள் வண்டி சென்றது. எனது முதல் மயானப் பயணம். பார்வை படும் இடம் எல்லாம் மிக நேர்த்தியான வரிசையில் கல்லறைகள் தெரிந்தன. மனத்தில் ஒரு விதமான வெறுமை தொற்றிக் கொண்டது. இவர்கள் எல்லாம் வாழ்க்கையின் பிடியிலிருந்து விடுதலையாகி நிம்மதியாக உறங்குவதுபோல்...

முதலில் குப்புறப் படுத்தது, முதலில் எழுந்து நின்றது, முதல் நடை, முதலில் விழுந்து முட்டி சிராய்த்தது - இதெல்லாம் நமக்கு நினைவிருக்காது. நம் பெற்றோருக்கு இருக்கும். நமக்கு முதல் திருட்டுத்தனம் நினைவிருக்கும். முதல் காதல் நினைவிருக்கும். முதல் தோல்வி, முதல் வெற்றி இதெல்லாம் மறக்க வாய்ப்பில்லை. எழுதுபவளுக்கு முதல் புத்தகம். ‘என்னைத் தேடி…’ நான் எழுதிய முதல் நாவல். உண்மையில் அதில் என்னைத்தான் தேடினேனா, என்னைப் போலவே இருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் எனக்குள் தேடினேனா என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அன்று தொடங்கிய தேடல் இன்றுவரை ஓயவில்லை; நான் இருக்கும் வரை ஓயப் போவதும் இல்லை. நெடுங்காலமாகப் பலபேர் கேட்டுக்கொண்டிருந்ததுதான். இப்போது இது சாத்தியமாகியிருக்கிறது. ‘என்னைத் தேடி’ இனி கிண்டிலில் கிடைக்கும். நீங்கள் வாங்கியும் படிக்கலாம், வாடகைக்கு எடுத்தும் படிக்கலாம். நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். எப்படிப் படித்தாலும், படித்துவிட்டு...

வாழ்க்கையில் சில தருணங்கள் மன நிறைவைத் தரும். அப்படியொரு நிகழ்வு சென்ற வாரம் நடந்தது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கும் தன்னார்வலர்களோடு சேர்ந்தேன். திருச்சிக்கு அருகில் உள்ள புதுர்பாளையத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில், 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூமில் வகுப்பு எடுத்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ் பேசும் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். தமிழ் பேசும் என்னைப் பார்த்து, மாணவர்கள் குதூகலமானார்கள். என்னிடம் தமிழில் சந்தேகங்களைக் கேட்டு புரிந்து கொண்டார்கள். அது அவர்களுக்கு இன்னும் சுலபமாக இருந்ததை உணர்ந்தேன். தொடர்ந்து இவர்களுக்கு ஆங்கிலம் பேசும் வகுப்பு எடுக்க,தமிழ் பேசும் தன்னார்வலர்கள் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸப் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். +91 9920597123 +971 544320123 #smart_life #share_knowledge...

என் பெயரைச் சுருக்கி என் நண்பர்களும்,குடும்பத்தாரும் விளிப்பது வழக்கம். ஜீன், மெளலா,பிசாசு கூட இருக்கு. 'அமியா ' என்று மகள்கள் அழைக்க, பெரிய தம்பி மகன்கள் 'நஸீ அமியா' என்பார்கள். மீண்டும் எனக்காக ஒரு புது பெயர் வைக்கப் பட்டுள்ளது. என் சின்ன தம்பி மகனுக்கு ஆறு மாதம் ஆகிறது.அவன் என்னை எப்படி அழைக்க வேண்டுமென்று,சில தினங்களுக்கு முன் தம்பி பெயர் தேடியது சுவாரசியமான நிகழ்வு. அவனுக்காக மட்டும் இனி நான் #டியா. டியா என்றாலும் ஸ்பானிஷில் அத்தை தானாம்....

எங்கள் வீட்டில் 2023வாசிப்பு போட்டி ஜனவரி 1 ஆம் தேதி ஆரம்பமானது. போட்டியின் விதி, ஒரு மாதத்தில் ஒரு புத்தகமாவது படித்து இருக்க வேண்டும். அது என்ன ஒரு புத்தகமாவது என்று கேட்டால், மகள்கள் ஒரு புத்தகம் படித்தாலே, என் ஹார்ட் ஹேப்பி ஆகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் என் மகள் ஜோயா இந்த மாதம் முடிவதற்குள் மூன்று புத்தகம் முடிக்கப் போகிறாள். சின்ன புத்தகம் எல்லாம் இல்லை. ஒவ்வொன்றும் 400 பக்கங்களுக்கு மேல். சாரா இரண்டு முடித்து, அடுத்துப் படிக்க வேண்டிய புத்தகம் பற்றிச் சொல்லிவிட்டாள்.   நான் தான் கட்ட கடைசி. இன்னும் எடுத்த புத்தகத்தை முடிக்காமல் இருக்கேன். மாதம் முடிவதற்குள் முடித்துவிடுவேன். இருந்தாலும் போட்டியின் கடைசி பெட்டியில் இருக்கிறேன். பள்ளியிலிருந்து வருவதற்குள் அவர்களுக்கு வேண்டிய புத்தகம் வந்து விட்டது.   [caption id="attachment_15757" align="alignnone" width="300"] புத்தகப் பரிசு[/caption]...

எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு, புக்பெட் வகுப்பு ஓர் திறவுகோல். எழுத எத்தனையோ இருக்கிறது; ஆனால் உட்கார்ந்தால் ஏதோ இடிக்கிறது; சரியாக வருவதில்லை என்று குறைப்படுவோருக்கு. ஆரம்பித்துவிட்டு முடிக்க முடியவில்லை என்று தவிப்பவர்களுக்கு. எழுத வருகிறது; ஆனால் பிறர் பாராட்டும் அளவுக்குச் செய்ய முடிவதில்லை என்போருக்கு. பளிச்சென்று ஊரே திரும்பிப் பார்க்கும்படியாக எழுதிவிட வேண்டும் என்ற அடங்காத ஆர்வம் கொண்டோருக்கு. அனைத்துக்கும் மேலாக, எழுத்து ஒரு கலை மட்டுமல்ல. பெரும் நுட்பங்களும் அடங்கிய செயல்பாடு; அதைக் கற்றுத் தேர்ந்தால்தான் முன்னணிக்கு வர முடியும் என்ற தெளிவு உள்ளவர்களுக்கு. நான் எழுத ஆரம்பித்து சில வருடங்களுக்குப் பின்தான் இந்த வகுப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்புக்குப் போனோம், கற்றுக் கொண்டு வந்தோம் என்று முடிந்திடவில்லை. வகுப்பு முடிந்த பின்னும் ,தொடர்ந்து பல விதமான கற்றல் நடந்து கொண்டிருந்தது. வகுப்பிற்கு...

நாளது வரை பார்க்காத, அனுபவிக்காத எல்லாவற்றையும் கடந்து, பெருமூச்சு விட்டபடிதான் 2022-ம் ஆண்டின் தொடக்கம் அமைந்தது. நான்கு வருடங்களாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த ‘பிரைனோ கிட்’ என்ற என் நிறுவனத்தை இழுத்துச் செல்ல பேய்ப் பலம் தேவையாக இருந்தது. முதலிலிருந்து ஆரம்பிக்க மனமும் தயாராகிக் கொண்டிருந்தது. என் நிறுவனமானது நடனம், பாட்டு, இசை, பள்ளிப் பாடங்களுக்கான டியூஷன், அரபி வகுப்பு என்று கிளைகள் விட்டு வளர்ந்து வந்தது. கோவிடில் வந்த ஆன்லைன் வகுப்புகள், சவாலாக இருந்தன. குழந்தைகளை மீண்டும் வகுப்புகளுக்கு அழைத்து வருதல் என்பது எளிதான விஷயமாக இல்லை. ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் கார் ஓட்டிக் கொண்டு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. இருந்தாலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளைத்தான் விரும்பினார்கள். வேலையிலிருந்த ஆசிரியர்களும், கொஞ்சம் கொஞ்சமாக வேறு வழியைப் பார்த்துக் கொண்டார்கள். என்னைச் சுற்றி நடக்கும்...