மராம்பு - விமர்சனம் 1 - Naseema Razak
15522
post-template-default,single,single-post,postid-15522,single-format-standard,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

மராம்பு – விமர்சனம் 1

தங்கள் குடும்பப் பொருளாதாரத்திற்காக மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்று தொழிலாளர்களாக வேலை செய்யும் ஐந்து பெண்களின் கதை. ஐந்து பெண்களும் வேறு வேறு மாநிலங்களில் இருந்து துபாய் சென்று ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். வீட்டு வேலை, கால் டாக்ஸி ஓட்டுனர், அழகுக்கலை நிபுணர், அலுவலக உதவியாளர் என்று நான்கு பெண்களுக்கும் ஒவ்வொரு வேலைகள். போலி ஏஜெண்டால் ஏமாற்றமப்பட்ட வள்ளி அந்த அறைக்கு வருகிறாள். அந்த அறையில் வள்ளி மட்டுமே தமிழ்ப் பெண்.

மொழிகள் வேறாக இருந்தாலும் உணர்வுகளும் பிரச்சனைகளும் மனிதர்களுக்கு ஒரே வகையானவைகள்தான். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, வாழ்வு முறை, பணிச் சூழல், போராட்டங்கள், வருங்காலக் கனவுகள், இவைகளுக்கு நடுவில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள், அந்த சந்தோசங்களை அவர்கள் சேர்ந்து கொண்டாடும் விதம் எல்லாம் நெகிழ்ச்சியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தந்தப் பெண்களின் பிரச்னைகளுக்கேற்ப யதார்த்தமான முடிவுகள்.

கற்பனைக் கதை இல்லை என்பதால் அமீரக பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் எழுதியிருக்கிறார் நாவலாசிரியர் நஸீமா ரஸாக்.

புத்தகம் வாங்க தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 9042461472

-பிரபு பாலா

https://www.facebook.com/photo/?fbid=10229283887740619&set=pb.1200034560.-2207520000.

No Comments

Sorry, the comment form is closed at this time.