08 Dec திருக்கார்த்தியல் – ராம்
நாம் அன்றாடம் வாழ்க்கையில் எங்கோ ஒரு பஸ் ஸ்டாப்பில் சேலை விலகிய அலங்கோலமான பெண்ணை கடந்து இருப்போம் , கிராமங்களில் இருக்கும் மாணவ விடுதிகளைக் கடந்து இருப்போம் , பம்ப் செட்டின் சின்ன அறையை வீடாக கொண்ட குடுபங்களைக் கடந்து இருப்போம் . இப்படி இயல்பாகத் தோன்றும் இந்த மக்களின் வலிகளை ஒவ்வொரு கதைகளில் வரும் கதாபாத்திரம் மூலம் , வாசகர்கள் கடந்து செல்ல முடியாமல் ,அந்த மக்களை கவனத்திற்குக் கொண்டுவந்து இருக்கிறார் ராம்.
பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை தெரு முழுக்க சமைக்க , மாணவ விடுதியில் தங்கி படிக்கும் செந்தமிழுக்கு, வெறும் வாசனையை மட்டும் தந்த வீதி மக்களின் மீது வந்த கோபம் . காய்ந்துபோன, கெட்டுப்போன அல்வாவை சுவைத்த அவன் நாக்கு, இயலாமையை , ஏமாற்றத்தை அறைந்து சொல்லுகின்றது .
அம்மாவும், அப்பாவும் இல்லாமல் விடுதியில் தங்கி படித்து வரும் கார்த்திக்கை ஓ.சி என்ற அவன் சாதி, கல்வியையும் பறித்த அவலம் மனதை கனக்க வைத்தது.
பானியின் மீது சுரேஷ் வைத்த அன்பும் , பானியின் விசுவாசமும் , உண்மையான நேசத்தை சுவாசிக்க வைக்கிறது. பள்ளி மாணவப் பருவத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் , ஆழமான வலிகள், வாசகனையும் இணைத்துக்கொள்கிறது
இது போன்ற இன்னும் பல படைப்புகளை ராம் எழுத என் வாழ்த்துக்களும் பேரன்பும் .
Sorry, the comment form is closed at this time.