January 2023 - Naseema Razak
0
archive,date,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

எங்கள் வீட்டில் 2023வாசிப்பு போட்டி ஜனவரி 1 ஆம் தேதி ஆரம்பமானது. போட்டியின் விதி, ஒரு மாதத்தில் ஒரு புத்தகமாவது படித்து இருக்க வேண்டும். அது என்ன ஒரு புத்தகமாவது என்று கேட்டால், மகள்கள் ஒரு புத்தகம் படித்தாலே, என் ஹார்ட் ஹேப்பி ஆகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் என் மகள் ஜோயா இந்த மாதம் முடிவதற்குள் மூன்று புத்தகம் முடிக்கப் போகிறாள். சின்ன புத்தகம் எல்லாம் இல்லை. ஒவ்வொன்றும் 400 பக்கங்களுக்கு மேல். சாரா இரண்டு முடித்து, அடுத்துப் படிக்க வேண்டிய புத்தகம் பற்றிச் சொல்லிவிட்டாள்.   நான் தான் கட்ட கடைசி. இன்னும் எடுத்த புத்தகத்தை முடிக்காமல் இருக்கேன். மாதம் முடிவதற்குள் முடித்துவிடுவேன். இருந்தாலும் போட்டியின் கடைசி பெட்டியில் இருக்கிறேன். பள்ளியிலிருந்து வருவதற்குள் அவர்களுக்கு வேண்டிய புத்தகம் வந்து விட்டது.   [caption id="attachment_15757" align="alignnone" width="300"] புத்தகப் பரிசு[/caption]...

எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு, புக்பெட் வகுப்பு ஓர் திறவுகோல். எழுத எத்தனையோ இருக்கிறது; ஆனால் உட்கார்ந்தால் ஏதோ இடிக்கிறது; சரியாக வருவதில்லை என்று குறைப்படுவோருக்கு. ஆரம்பித்துவிட்டு முடிக்க முடியவில்லை என்று தவிப்பவர்களுக்கு. எழுத வருகிறது; ஆனால் பிறர் பாராட்டும் அளவுக்குச் செய்ய முடிவதில்லை என்போருக்கு. பளிச்சென்று ஊரே திரும்பிப் பார்க்கும்படியாக எழுதிவிட வேண்டும் என்ற அடங்காத ஆர்வம் கொண்டோருக்கு. அனைத்துக்கும் மேலாக, எழுத்து ஒரு கலை மட்டுமல்ல. பெரும் நுட்பங்களும் அடங்கிய செயல்பாடு; அதைக் கற்றுத் தேர்ந்தால்தான் முன்னணிக்கு வர முடியும் என்ற தெளிவு உள்ளவர்களுக்கு. நான் எழுத ஆரம்பித்து சில வருடங்களுக்குப் பின்தான் இந்த வகுப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்புக்குப் போனோம், கற்றுக் கொண்டு வந்தோம் என்று முடிந்திடவில்லை. வகுப்பு முடிந்த பின்னும் ,தொடர்ந்து பல விதமான கற்றல் நடந்து கொண்டிருந்தது. வகுப்பிற்கு...

மெட்ராஸ் பேப்பர் ஆரம்பம் முதல் பா. ராகவன் அவர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தனது புக்பெட் வகுப்புக்கு வந்த சிறந்த  மாணவர்களிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து  அடுத்த கட்ட பயிற்சிக்குத் தயார் செய்தார். மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுத வைத்தார். வகுப்புக்கு வந்தார்கள் சென்றார்கள் என்று இல்லாமல், வகுப்புக்கு வந்தார்கள் வென்றார்கள் என்ற இடத்திற்குத் தனது மாணவர்களை எழுத்தாளர்களாக மாற்றினார். இது எல்லாம் ஒரே நாளில் நடந்து முடியவில்லை. இதற்குப் பின் அவரது உழைப்புக்கு ஈடு கொடுக்க மாணவர்களும் தயாரானார்கள். [caption id="attachment_15741" align="alignleft" width="300"] பா. ராகவன்[/caption] வாழ்க்கையில் முதல் கொடுக்கும் அனுபவம் அலாதியானது. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் 13 புத்தகங்களை ,ஜீரோ டிகிரி பதிப்பு மூலம் சென்னை புத்தகக் காட்சியில் வெளிவரவுள்ளன. ஓரிருவர் தவிர மற்ற 11 பேரும் முதல் முறை எழுத்தாளர்கள். ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை அன்று...