பள்ளிப் பருவத்தில் மார்க்ஸ் எழுதிய கட்டுரை.
ஆரம்பப் படிப்பு முடிந்ததும் மார்க்ஸ் ட்ரியரிலிருந்து உயர் தரப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான். அப்பொழுது அவனுக்கு வயது பன்னிரண்டு. சரியாக ஐந்து வருஷ காலம் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தான். லத்தீன், ஜெர்மன்,கிரீக்,பிரெஞ்சு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றான். இவனுடைய கவிதா சக்தியும் வளர்ந்து வந்தது. அதே சமயத்தில் இவனுடைய மனமும் பண்பாடு பெற்று வந்தது. தன்னுடைய எதிர்கால வாழ்க்கை இன்னபடி தான் இருக்க வேண்டும் என்பதை இவன் இந்தக் காலத்தில் நிர்ணயம் செய்து கொண்டுவிட்டான் எப்படியென்றால்,கடைசி வருஷப் பரீட்சையின் போது, இவனுடைய வினாப்பத்திரம் ஒன்றில், ' ஓர் இளைஞன் ஏதேனும் ஒரு தொழிலில் பிரவேசிப்பதற்கு முந்தி அவன் மனதில் உதிக்கும் எண்ணங்கள் என்பதைப் பற்றி ஒரு வியாசம் எழுதுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை இவன் மிக அழகாக எழுதினான். அதில் பொதிந்துள்ள நுட்பமான,கருத்துக்களைக் கண்டு இவனுடைய ஆசிரியர்கள் பிரமித்துப் போனார்கள்....