29 Mar ரமலான் மாதத்தில் கிடைத்த முத்தம்.
பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் இருந்தேன். அந்தக் கடையில் என்னையும் இன்னொரு பெண்ணையும் தவிர்த்து வேறு வாடிக்கையாளர்கள் இல்லை. அந்தப் பெண்மணி விக்ஸ் டப்பாவை கையில் வைத்து, கடைப் பயனிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். கடைப் பையன் மலையாளி. அவனுக்கு அவர் கேட்பது புரியவில்லை. அவருக்கு அவன் பேசுவது புரியவில்லை. அந்தம்மா வங்காள மொழியில் பேசிக் கொண்டிருந்தார் என்று மட்டும் எனக்குத் தெரிந்தது. சரியாகப் புரியாவிட்டாலும், விக்ஸ் டப்பாவை என் கையில் வாங்கினேன். மூக்கை உறிஞ்சுவது போல், தொண்டை வலிப்பது போல் சைகை செய்தேன். “ஓ…சொர்தி?” என்று சொல்லிக் கொண்டு அதை எடுத்த இடத்தில் வைத்தார். முதலில் தனது கழுத்தைத் தொட்டு ஏதோ சொன்னார். பிறகு முதுகு, இடுப்பு என்று எங்கெல்லாம் வலிக்கிறதோ அங்கெல்லாம் அவர் கை தானாகச்...