#நடைவண்டியில் ஏறி கவிதை படிக்க ஆர்வமாய் பயணித்தேன். அழகான கவிதைகள் ஆழமான சிந்தனைகள் என்ற பக்குவமான எழுத்துக்கள். 25 வருடத்திற்கு முன் எழுதிய அந்த இளைஞனை யோசித்து வியந்தேன்.
” சுதந்திரம் ” மூலம் தந்த தாகம்,
” சதுரங்கம் ” ஆட்டத்தை நடத்தி இறுதியாக எதிரியுடன் கை குலுக்குவதே சுதந்திரம் என்று முடிக்கும் மனம்,
கடிகார முட்கள் சொல்லும் கம்பீரம், வீரம், ஒரே பாதையில் பயணித்தும் ஒன்றை ஒன்று தடுத்துக் கொள்ளாத நாகரீகம்,
“நவீன நாடுகடத்தல்”, தீ என்று பெண் உணர்வுகளையும் சேர்த்து சமூக சிந்தனைகளை எழுத்துக்களால் செதுக்கி இருக்கின்றார்.இந்த நூலை Brindha Sarathy #பிருந்தா சாரதி அவர்களிடம் இருந்து பரிசாக பெற்றது கூடுதல் சிறப்பு.
Discover more from Naseema Razak
Subscribe to get the latest posts sent to your email.







