மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா - Naseema Razak
15735
post-template-default,single,single-post,postid-15735,single-format-standard,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா

மெட்ராஸ் பேப்பர் ஆரம்பம் முதல் பா. ராகவன் அவர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தனது புக்பெட் வகுப்புக்கு வந்த சிறந்த  மாணவர்களிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து  அடுத்த கட்ட பயிற்சிக்குத் தயார் செய்தார்.

மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுத வைத்தார். வகுப்புக்கு வந்தார்கள் சென்றார்கள் என்று இல்லாமல், வகுப்புக்கு வந்தார்கள் வென்றார்கள் என்ற இடத்திற்குத் தனது மாணவர்களை எழுத்தாளர்களாக மாற்றினார். இது எல்லாம் ஒரே நாளில் நடந்து முடியவில்லை. இதற்குப் பின் அவரது உழைப்புக்கு ஈடு கொடுக்க மாணவர்களும் தயாரானார்கள்.

பா. ராகவன்

வாழ்க்கையில் முதல் கொடுக்கும் அனுபவம் அலாதியானது. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் 13 புத்தகங்களை ,ஜீரோ டிகிரி பதிப்பு மூலம் சென்னை புத்தகக் காட்சியில் வெளிவரவுள்ளன. ஓரிருவர் தவிர மற்ற 11 பேரும் முதல் முறை எழுத்தாளர்கள்.

ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை அன்று டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மாலை 5 மணி முதல் விழா நடைபெற உள்ளது. இது வெறும் புத்தக வெளியீடு இல்லை. மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா. இதைக் கொண்டாட்டமாக மாற்ற வாய்ப்புள்ள அனைவரும் வந்து வாழ்த்த வேண்டும்.

உங்களோடு கலந்துரையாட நாங்கள் காத்துக் கொண்டிருப்போம்.

1 Comment
  • Thiruvarur Saravana
    Posted at 07:55h, 06 January

    மெட்ராஸ்பேப்பர் தொடங்கும்போது ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல்மலர் வெளியீட்டை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பேசிய நினைவு. ஆனால் பதிமூன்று புத்தகங்கள் வெளியீடு என்பது மிகப்பெரிய பணி.

    மெட்ராஸ் பேப்பரில் தொடராக வெளிவந்தவையும் சரி, நேரடியாக நூல்வடிவம் பெறுபவையும் சரி, வாசகர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்கும் பயனுள்ள புத்தகங்கள் பட்டியலில் தவறாது இடம்பிடித்துவிடும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்து.

    பா.ராவின் வேகத்திற்கு ஈடு கொடுத்து புத்தகங்களை எழுதிய அனைவருக்கும் வாழ்த்து. (நான் எல்லாம் தொடக்கத்திலேயே போட்டியில் இருந்து பின்வாங்கிவிட்ட ஆள்)