அமீரகத்தில் அத்தைகள் நடத்தும் இலவச தமிழ் வகுப்பு - Naseema Razak
15854
post-template-default,single,single-post,postid-15854,single-format-standard,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

அமீரகத்தில் அத்தைகள் நடத்தும் இலவச தமிழ் வகுப்பு

அன்னை மொழி அறிவோம் பள்ளிக் கூடத்தின் ஐந்தாம் ஆண்டு விழா

தமிழ் நாட்டை தாண்டினலே  தமிழ் மொழி இல்லாத பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைப் படிக்க வைக்கும் நிலையே அதிகம்.  கடல் தாண்டி இருக்கும் அமீரகம் மட்டும் விதிவிலக்கா என்ன?

தோழி அனுராதா கங்காதரன் ஐந்து வருடங்களுக்கு முன் தன் மகன்களுக்காகத் தமிழ் வகுப்புகளைத் தேடினார். பலன் இல்லை. இப்படியே விட்டால் குழந்தைகள் தமிழ் தெரியாதவர்களாக வளர வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை உணர்ந்தார்.  அந்தப் பணியைத் தானே ஆரம்பித்து வைக்க முடிவு செய்தார். அனுராதா, லிட்டில் ஸ்ப்ரோட்ஸ் என்ற நர்ஸரி வைத்து நிர்வகித்து வருகிறார். 

பள்ளி இல்லாத நேரங்களில் தமிழ் சொல்லிக் கொடுக்கும் வகுப்பைத் தொடங்கி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதுவும் ஐந்து பைசா வாங்காமல் இலவசமாகச் சொல்லிக் கொடுத்து வருகிறார். நல்ல எண்ணம் எங்கு தோன்றினாலும் அது ஈடேற எல்லாம் நடக்கும் என்பது நம்பிக்கை. அது அனுவின் விஷயத்தில் பொய்க்கவில்லை.

அந்த நர்ஸரிக்கு அக்கம் பக்கத்தில் வசித்து வந்த தமிழ் பெண்கள் எல்லாம் ஒன்று கூடி தன்னார்வலர்களாக ஆனார்கள். நான்கு பேர் ஆசிரியர்களாக தங்கள் பொறுப்புகளை தொடங்கினார்கள்.  மாணவர்களும் வந்து சேர ஆரம்பித்தார்கள். மாணவர்கள் ஆசிரியர்களை டீச்சர் என்றோ, மிஸ் என்றோ அழைப்பதில்லை.  அத்தை என்றே அழைக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவர்கள் எடுக்கும் பாடங்களுக்கு இதை விட பெரிய உந்துதல் வேறு என்ன இருக்க முடியும்.

இதில் வருடா வருடம் நானும் ஒரு அத்தையாகக் கவிதை, கதை, திருக்குறள், பேசுப் போட்டி என்று பல விதமான போட்டிகளுக்கு நடுவராகச் சென்று வருகிறேன் . கல்லிடைக் குறிச்சி முனைவர் முகைதீன் தொடர்ந்து ஊகம்மளித்து வருகிறார். இந்த வருடம் எங்களுடன் சசி குமார்(எழுத்தாளார், பேச்சாளர், கவிஞர்) இணைந்து கொண்டார். அதற்கான ஆண்டுவிழா சனிக்கிழமை அஜ்மானில் நடந்தது.

இந்த முறை குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவில் அத்தைகள் எல்லாம் சேர்ந்து வில்லுப் பாட்டை பாடி அரங்கைக் கரகோஷத்தில் திக்குமுக்காட வைத்தார்கள்.

ப்ரைனோ கிட் நிறுவனத்தை நிறுவியதிலிருந்து இன்று வரை என்னையும் குழந்தைகளோடு சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பை அளித்துவரும் தோழி அனு கங்காதரனுக்கும், தமிழ் மினி மார்ட் நிறுவினர் கங்காதரனுக்கும் என்றும் அன்பும் வாழ்த்துகளும்.

இந்தப் பதிவில் அங்கு பாடங்கள் எடுக்கும் அத்தைகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளேன். நான்கு அத்தைகள் இல்லை பன்னிரண்டு அத்தைகள் உள்ளனர். இதை வாசிக்கும் அனைவரும் அவர்கள் சேவையையும் பாராட்டி வாழ்த்த வேண்டுகிறேன்.

நிற்க , பெண்கள் மட்டும்தான் தன்னார்வலர்களாக இருக்க முடியுமா? ஏன் ஒரு மாமா வந்து சொல்லிக் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளமாட்டீரா? என்று தன் பணிகளுக்கிடையில் தமிழ் வகுப்பை எடுக்க இந்த வருடம் முதல் திரு. முத்தமிழ் செல்வன்  இணைந்திருக்கிறார். தமிழ் சேவை செய்யும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

1. திரு. கங்காதரன் – Founder

2. திருமதி. அனுராதா கங்காதரன் 

                 Founder & President 

அன்னை மொழி அறிவோம், அமீரகம்

3. திருமதி. விக்னிப்பிரியா லக்ஷ்மணன்

     Vice President

4.  திருமதி. புனிதா மஞ்சுநாதன்

      Secretary

5. திருமதி. பாத்திமா குல்னார்

6.  திருமதி. சரண்யா

7.  திருமதி. கவியரசி

8. திருமதி.இராஜேஸ்வரி முத்தமிழ் செல்வன் 

9.திருமதி. கலைச்செல்வி அரசளகுமார்

10. திருமதி. மாலதி அன்பு

11. திருமதி.மாலதி அருள்கண்ணன்

12.  திருமதி. சூர்யா வேல்முருகன்

13. திருமதி. தாட்சாயினி

14. திரு. முத்தமிழ் செல்வன்

 

அன்னை மொழி அணியை தெரிந்து கொள்ள https://www.facebook.com/profile.php?id=100010111215155.

1 Comment
  • மூ.பாலகிருஷ்ணன்
    Posted at 06:33h, 02 May

    அத்தையர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தமிழகத்திலே தமிழில் கற்றலைக் கற்பித்தலை அவமானமாகக் கருதும் சூழலில், கடல் கடந்து தாய்மொழித் தமிழைக் குழந்தைகளுக்குச் சுயாதீனமாகக் கற்றுக்கொடுக்கும் தன்மையைக் கண்டு உள்ளம் மகிழ்கிறேன். இப்படிப்பட்டவர்களால்தான் தமிழ் புழக்கத்திலே இருக்கிறது என்பது தின்னம். உங்களின் மொழியறம் சிறக்க வாழ்த்துகள்…..