Naseema Razak, Author at Naseema Razak - Page 2 of 5
2
archive,paged,author,author-naseema,author-2,paged-2,author-paged-2,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதை விடப்பெரிய தகுதியாகப் பொறுமை இருக்க வேண்டும். இதெல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் சிலர் வாழ்க்கையில் எடுத்த எடுப்பில் வெற்றி கிடைத்துவிடும். கிடைத்த வெற்றியைத் தக்க வைப்பது என்பது வெற்றிபெற உழைப்பதை விடப் பெரிய வேலை. காஜு இஷிகுரோ என்ற ஜப்பான் இளைஞர் தன்னுடைய இருபத்தெட்டாவது வயதில் முதல் நாவலை வெளியிடுகிறார். அந்த நாவலும் வாசகரிடத்தில் கவனம் பெறுகிறது. அடுத்தடுத்து அவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. இவையனைத்தும் பகுதி நேரத்தில் எழுதி முடித்தவை. அவரது இரண்டாவது நாவல் 1983-ஆம் ஆண்டு புக்கர்விருதைப் பெறுகிறது. இரண்டாவது புத்தகத்தில் புக்கர் எல்லாம் சாதாரண வெற்றி இல்லை. இலக்கிய உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் இஷிகுரோவுடைய நேரம் தேவைப்படும் என்று அவர் நினைக்கவில்லை. விருது கிடைத்தவுடன்...

  எண்பத்தி மூன்று வயதாகும் அந்த முதியவருக்காக இன்றும் வாசகன் காத்துக் கொண்டிருக்கிறான். அவர் பிறக்கும் போது தந்தை இழப்பு. தாய் லண்டனில் இருக்கும் வெஸ்டன் நகரின் லோக்கல் செய்தித்தாளில் வாராந்திர பத்தி எழுத்தாளர். இலக்கியம், வரலாறு பாடங்களில் சிறந்து விளங்கிய அந்த இளைஞன் இராணுவம், காவல்துறை, ஆசிரியர் என்று கிடைத்த வேலை எதையும் விடவில்லை. 1963-ஆம் ஆண்டு ஆக்ஸ்பார்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் டிப்ளமோ படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்திருக்கிறார் என்று பலர் சந்தேகப்பட்டார்கள். ஆனால் அவர் விளையாட்டுத் துறையில் சி̀றந்து விளங்கினார். ஆக்ஸ்பார்ட் அவரை அதெலெட் க்ளபின் பிரெஸிடெண்ட் என்ற பதவி கொடுத்து மூன்று வருடம் அங்கே இருக்க வைத்தது. அதற்குப் பின் தொண்டு நிறுவனம் ஒன்றில் நிதி திரட்டுபவராக வேலை செய்தார். அரசியல் ஆர்வம் வந்தது. உள்ளூர் கவுன்சிலர் என்று ஆரம்பித்து...

1927 ஆம் ஆண்டு சிகாகோ நகரிலொரு பத்து வயதுச் சிறுவன் தான் எழுதிய கவிதைத் தாளோடு சுற்றிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் முகத்தில் சந்தோஷத்தின் குதூகலம். கவிதைத் தாளிற்குப் பதில் கையில் பத்து டாலர் இருந்தது. அவனுக்குக் கிடைத்த முதல் சம்பளம் அது. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு சம்பாதித்தான். அதிகமாக நாடகக் குழுவில் வாய்ப்புகள் வந்தன. தனது பதினேழாவது வயதில், பெரிய வாய்ப்புகளைத் தேடிச் சென்றவனுக்கு ஹாலிவுட்டில் வாய்ப்பு. வாரத்திற்கு இருபத்திரண்டு டாலர் சம்பளத்தில் ஸ்க்ரிப்ட் ரீடராக வேலை கிடைத்தது. இரவு நேரங்களில் தன்னுடைய சொந்தத் திரைக் கதையை எழுத ஆரம்பித்தான். அதையும் இருநூற்று ஐம்பது டாலருக்கு விற்றான். வாலிபன் என்றால் இராணுவத்தில் சிறிது காலம் இருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. நாடகம் எழுதிக் கொண்டிருந்தவர் இராணுவ பைலட்டாக வேலை செய்தார்....

எல்லாருக்கும் சரியான அம்மா அப்பா கிடைத்துவிடுவதில்லை. அவனுக்கும் அப்படி தான். இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே அப்பா என்ற கதாபாத்திரம் ஓடிப் போனது. ஓடிப்போனவன் தெரிந்தோ தெரியாமலோ உருப்படியான வேலையைச் செய்திருந்தான்.  பெட்டி நிறைய ஃபேண்டஸி ஹாரர் புத்தகங்களை வீட்டில் வைத்துவிட்டுப் போனான். இரண்டு வயதுக் குழந்தைக்கு ஐந்து வயதானது. பொம்மை இல்லாத வீட்டில் அந்தப் பெட்டிதான் எல்லாம். புத்தகங்களோடு விளையாட ஆரம்பித்த குழந்தை நியாயமாகக் கிழித்து இருக்க வேண்டும். ஆனால் வாசித்து முடித்தது. ஏழு வயதில் கதை எழுதத் தயாரானான். பன்னிரண்டு வயதில் பள்ளி மாத இதழ் ஒன்றில் அவன் கதையும் வெளிவந்தது. பேய் படம் பார்ப்பதும்,சைன்ஸ் பிக்சன் படங்கள் பார்க்கும் பழக்கமும் அவனோடு சேர்ந்து வளர்ந்தது.  கல்லூரி படிப்பும் முடிந்தது. ஆங்கிலத்தில் பட்டம். பட்டம் பெற்ற அடுத்த ஆண்டு திருமணம். பள்ளியில் ஆசிரியர் பணி .மூன்று குழந்தைகள் என்று சராசரி வாழ்க்கை. கிடைக்கும் சம்பளத்தில் அனைத்தையும் சமாளிக்க முடியவில்லை. எத்தனையோ பகுதி நேர வேலைகள் கைவசம் இருந்தன. ஆனால் எழுதுவதில் மனம் நின்றது. எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான...

டோக்கியோ நகரிலிருந்த அந்த ஜேஜ் பாரில் பலர் குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே ஜேஜ் இசைக்கு ஆடிக் கொண்டும் இருந்தார்கள். மூத்திர வாடையோ வாந்தியோ அங்கு இருக்கவில்லை. கூட்டம் கூடிக் கொண்டிருந்த பாரில் அந்த இளைஞன் பரபரப்பாக இருந்தான். வந்தவர்களுக்கு காக்டெயில் செய்துக் கொண்டும் சைடிஷ்ஷை வைத்துக் கொண்டும் இருந்தான். நடுநடுவே அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்கள் மீது அவன் கவனமும் இருந்தது. வாடிக்கையாளர்கள் மட்டையானால் பாதகமில்லை. பணியாட்கள் ஆனால் பேஜாராகிவிடும் என்ற நல்ல நோக்கமே அவன் கவனத்துக்குக் காரணம். வந்தவர்கள் எல்லாம் மகிழ்ந்து உருண்டு செல்ல விடிந்துவிடும். பாரை மூடிவிட்டு நேராக அடுக்களையில் இருக்கும் அடுப்பு மேடையில் காகிதத்தை வைத்து எதையோ கிறுக்க ஆரம்பித்தான். அவன் அப்படி மாறியதற்குக் காரணம் சில நாள்கள் முன் அவன் ரசித்துப் பார்த்த பேஸ் பால் ஆட்டத்திற்குப் பின்பு தான்....

திறமையானவர்கள், வெற்றியாளர்கள் என்று யாரும் வானத்திலிருந்து குதித்து வருவதில்லை. அல்லது பிறந்த நொடியில் வெற்றியாளன் என்று கொண்டாடப்படுவதில்லை.  அப்பா மருத்துவர். அம்மா தீவிர மதப்பற்றாளர். அவர்  குழந்தைப் பருவம் அன்றைய மற்ற அமெரிக்கக் குழந்தைகளை விட வசதியாக இருந்தது.  அம்மா கண்டிப்பானவர். மாணவனாக இருந்த போது இரண்டு முறை வீட்டை விட்டு ஓடி இருக்கிறார். அம்மாவின் கண்டிப்பிலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்பாவோடு வேட்டைக்குச் செல்வது வழக்கம். வேட்டையாடுவதிலும்,மீன்பிடிப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.  பதினெட்டு வயதாகும் போது வீட்டிலிருந்து தப்பிக்கச் சரியான வழியைக் கண்டுபிடித்தார். அந்தக் காலகட்டத்தில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்திருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளோடு போரிடத் தயாராகிக் கொண்டிருந்தது.  தன் நாட்டுக்காகப் போரிட வேண்டும் என்று கிளம்பிச் சென்றவருக்கு ஏமாற்றம். கண் பார்வை சரியில்லை என்று நிராகரித்தார்கள். எப்படியாவது நாட்டுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. அடிப்பட்ட போர் வீரர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறினார்.  அப்படியொரு நாள் போர் வீரனை அழைத்துச் செல்லும் போது அவருக்கும் குண்டடிப்பட்டது. அதற்கெல்லாம் அவர்...

எழுத்தாளர் : கோகிலா பாபு வாழ்க்கைத் தத்துவங்களை குட்டி குட்டிக் கதைகள் வழியே சொல்வது எல்லா மதங்களிலும் இருக்கும் வழக்கம். இஸ்லாத்தின் ஒரு பிரிவான சூஃபி தத்துவங்கள் கதைகளாக உலகம் முழுவதும் பிரபலம். சிறிய கதைகளாக இருப்பாதால் பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தகம் என்று பலர் நினைப்பார்கள். குழந்தைகளும் படிக்கலாம். ஆனால் இது பெரியவர்களுக்குமானது. அளவில் சிறிதாக இருந்தாலும் இவை விளக்கும் வாழ்வியல் உண்மைகள் பெரியது. படிப்பவரின் வயதுக்கும் மனதுக்கும் ஏற்ற புரிதலை உண்டாக்குவது. இந்தப் புத்தகத்தின் முதல் கதையும் அதைத்தான் சொல்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூமியின் கதைகளையும், மேலும் சில பழைய கதைகளையும் சேர்த்து தொகுத்துள்ளதாகச் சொல்கிறார் நூலாசிரியர். ஐம்பது கதைகளில் ஐந்தைத் தவிர மற்ற அனைத்தும் எனக்குப் புதியவை. ஒன்றிரண்டு பக்கங்களில் தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன. தேவாமிர்தம், வழிப்பிள்ளையாருக்கு உடைத்த தேங்காய் என, எனக்குப் பழகிய வார்த்தைகளும் கதைகளில்...

பாகிஸ்தான் சரித்திரத்தில் இதற்குமுன் நடந்திராத ஒரு சம்பவம் இப்போது நடந்திருக்கிறது. என்னை ஐ.எஸ்.ஐயிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஒரு தீவிரவாத இயக்கத் தலைவர் அரசு அதிகாரியிடம் தஞ்சம் கேட்டிருக்கிறார். இதனாலெல்லாம் உலகம் அழிந்துவிட வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. நம்ப முடியாத அவ்வுண்மைச் சம்பவத்தைப் படிக்க லிங்க் கீழே. https://www.madraspaper.com/hizbulla-mujahidin-isi-warning/ ...

2019 ல் ஐ.எஸ்.ஐ எஸ் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைய முடியாது. அவர்கள் விட்டுப் போன மிச்சமாகப் பல ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் சிரியா முகாம்களில் இருக்கின்றார்கள். சரியான முடிவை உலக நாடுகள் எடுக்கவில்லை என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர் கதையாகும்.  இன்றைய மெட் ராஸ் பேப்பர் இதழில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.   https://www.madraspaper.com/syria-isis-refugees-camp/  ...

ஆரம்பப் படிப்பு முடிந்ததும் மார்க்ஸ் ட்ரியரிலிருந்து உயர் தரப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான். அப்பொழுது அவனுக்கு வயது பன்னிரண்டு. சரியாக ஐந்து வருஷ காலம் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தான். லத்தீன், ஜெர்மன்,கிரீக்,பிரெஞ்சு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றான். இவனுடைய கவிதா சக்தியும் வளர்ந்து வந்தது. அதே சமயத்தில் இவனுடைய மனமும் பண்பாடு பெற்று வந்தது. தன்னுடைய எதிர்கால வாழ்க்கை இன்னபடி தான் இருக்க வேண்டும் என்பதை இவன் இந்தக் காலத்தில் நிர்ணயம் செய்து கொண்டுவிட்டான் எப்படியென்றால்,கடைசி வருஷப் பரீட்சையின் போது, இவனுடைய வினாப்பத்திரம் ஒன்றில், ' ஓர் இளைஞன் ஏதேனும் ஒரு தொழிலில் பிரவேசிப்பதற்கு முந்தி அவன் மனதில் உதிக்கும் எண்ணங்கள் என்பதைப் பற்றி ஒரு வியாசம் எழுதுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை இவன் மிக அழகாக எழுதினான். அதில் பொதிந்துள்ள நுட்பமான,கருத்துக்களைக் கண்டு இவனுடைய ஆசிரியர்கள் பிரமித்துப் போனார்கள்....