
08 Dec அழகு!!!
என் மாணவர்களோடு நிறையப் புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் இந்த படம் மனசுக்கு மிகவும் நெருக்கமானது. இந்த குட்டி வாண்டு பெயர் “காவரில்” என் சென்டரின் கடைக்குட்டி . ஒரு நாள் நான் கதை சொல்லும் போது தானும் சொல்ல வேண்டும், என்று என் அருகில் வந்தான். நான் கதை முடித்த பிறகு, நீ கதை சொல் என்றேன்.என் அருகிலே நின்று கொண்டு இருந்தான், அதுவும் சும்மா இல்லை என் சுண்டி விரலைச் சுரண்டிக் கொண்டே . நான் முடித்த பிறகு கதை சொல்லத் தொடங்கினான்.என்னை அங்கே இருந்து நகர விடாமல் என் கைகளைப் பிடித்துக் கொண்டு கதைத்தான். அவன் கதைப்பது முடியும் வரை, அந்த பிஞ்சு விரல்களும் அந்த அன்பைச் சொல்லிக் கொண்டு இருந்தது.
Sorry, the comment form is closed at this time.