25 Jan புக்பெட் ஆன் லைன் எழுத்துப் பயிற்சி வகுப்புகள்
எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு, புக்பெட் வகுப்பு ஓர் திறவுகோல். எழுத எத்தனையோ இருக்கிறது; ஆனால் உட்கார்ந்தால் ஏதோ இடிக்கிறது; சரியாக வருவதில்லை என்று குறைப்படுவோருக்கு. ஆரம்பித்துவிட்டு முடிக்க முடியவில்லை என்று தவிப்பவர்களுக்கு. எழுத வருகிறது; ஆனால் பிறர் பாராட்டும் அளவுக்குச் செய்ய முடிவதில்லை என்போருக்கு. பளிச்சென்று ஊரே திரும்பிப் பார்க்கும்படியாக எழுதிவிட வேண்டும் என்ற அடங்காத ஆர்வம் கொண்டோருக்கு. அனைத்துக்கும் மேலாக, எழுத்து ஒரு கலை மட்டுமல்ல. பெரும் நுட்பங்களும் அடங்கிய செயல்பாடு; அதைக் கற்றுத் தேர்ந்தால்தான் முன்னணிக்கு வர முடியும் என்ற தெளிவு உள்ளவர்களுக்கு.
நான் எழுத ஆரம்பித்து சில வருடங்களுக்குப் பின்தான் இந்த வகுப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்புக்குப் போனோம், கற்றுக் கொண்டு வந்தோம் என்று முடிந்திடவில்லை. வகுப்பு முடிந்த பின்னும் ,தொடர்ந்து பல விதமான கற்றல் நடந்து கொண்டிருந்தது. வகுப்பிற்கு வந்த சிறந்த மாணவர்கள் மெட்ராஸ் பேப்பரில் கட்டுரை எழுதினார்கள். அது மட்டுமா? எழுத்தார்வமும், விடா முயற்சியும் உள்ள பன்னிரண்டு மாணவர்களின் புத்தகங்கள், சென்னை புத்த்கக் காட்சியில் மெட்ராஸ் பேப்பர் மூலம் ஜீரொ டெகிரி பதிப்பகத்தில் வெளிவந்தன.
ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். வகுப்புக்கு வந்தோம் சென்றோம் என்று இருக்காது. ஆர்வமுள்ளவர்களுக்கு வகுப்பைப் பற்றிய தகவல் தந்துள்ளேன்.
இரண்டு விதமான பிரிவில் வகுப்புகள் நடைப் பெற உள்ளன.
புனைவெழுத்து, அபுனைவெழுத்து, சமூக ஊடக எழுத்து, நாவல் இந்நான்கும் ஒரு பிரிவில் வரும் (Group A).
எட்டு வகுப்புகள்; பதினாறு மணி நேரம். ஒவ்வொரு சனி-ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்திய நேரம் மாலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை இந்த வகுப்புகள் நடக்கும்.
Book Editing, Style, Book Structuring மூன்றும் தனிப் பிரிவு (Group B).
இதுவும் மொத்தம் எட்டு வகுப்புகள், அதே பதினாறு மணி நேரம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை நடக்கும். (Group B மட்டும் ஒரு வாரம் தள்ளி, பிப்ரவரி 11 இரண்டாவது சனிக்கிழமை அன்று தொடங்கும்.)
ஆர்வமும் தேவையும் உள்ளவர்கள் Group A அல்லது B அல்லது இரண்டிலும் இணையலாம். தனித்தனியே ஒரு குறிப்பிட்ட பாடப் பிரிவில் (உதாரணம்: அபுனைவு மட்டும் அல்லது நாவல் மட்டும். எடிட்டிங் மட்டும்…) இனி சேர இயலாது.
ஏற்கெனவே சேர்ந்துவிட்டவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்படும். புதிதாக யாரையும் இனி தனித்தனி வகுப்புகளில் சேர்க்க இயலாது. இரண்டில் ஒரு பிரிவை மொத்தமாகவே தேர்வு செய்ய வேண்டும். ஓர் இயலை ஓரளவேனும் முழுவதுமாகப் புரிந்துகொள்ள அதுவே சரியான முறை.
நிற்க.
+91 8610284208 என்பது Bukpet எழுத்துப் பயிற்சி வகுப்புக்கான வாட்சப் எண். Group A / Group B இரண்டில் நீங்கள் எதில் இணைய விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிட்டு வாட்சப் செய்யுங்கள். இதர விவரங்களை அட்மின் அனுப்புவார்.
வகுப்பில் சேரப் பதிவு செய்வோருக்கு ஜனவரி 28 சனிக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு ஓர் அறிமுக நிகழ்ச்சி நடக்கும். இது வகுப்பல்ல. வகுப்பு குறித்த உங்களுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்படுவது.
முன்சொன்னபடி வகுப்புகள் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கும். எனவே, இக்கணம் முதல் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 2ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.
Sorry, the comment form is closed at this time.