மூன்றாவது பீரியட் முடிந்து இடைவேளை மணி அடித்தது. வகுப்பறையிலிருந்து மாணவர்கள் வெளியே சென்று கொண்டிருந்தார்கள். புத்தகங்களைப் பையில் வைத்தபடி குணால் திவ்யாவைப் பார்த்தான். அவள் நாவல் ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்திருந்தாள். அவளிடம் அவன் செல்ல இரண்டடி இருக்கும் முன்பே கிருஷ் இரண்டு ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்டுடன் திவ்யாவிடம் வந்து நின்றான்.
“ஹை திவ்யா”.
“ஹே..கிருஷ் ..என்ன இன்னைக்கும் கையில சாக்லேட்?”
“சும்மா …எல்லாருக்கும் வாங்கினேன், இந்தா திவ்யா” என்று கொடுத்தான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த குணாலின் காதுகள் மட்டும் ரோஜாப்பூ நிறத்தில் மாறின.
“திவ்யா..கேன்டீன் வரியா? போலாம்” என்றான் கிருஷ்.
திவ்யா குணாலைப் பார்த்து, “குணா நீயும் வா போலாம்” என்று அழைத்தாள். மறுக்க முடியாமல் உடன் சென்றான். முதலாவது தளத்திலிருந்த வகுப்பிலிருந்து கீழே இறங்கி கேன்டீன் சென்றார்கள். உட்காரக் கூட இடம் கிடைக்கவில்லை. குணால் சுற்றும் முற்றும் பார்த்தான். கேன்டீன் மூலையில் ஒரு மேஜை காலியாகிக் கொண்டிருந்தது.
“திவ்யா….நான் போய் இடம் பிடிக்கிறேன்..நீ வா ” என்று சொல்லிவிட்டு ஓடினான்.
மூன்று நாற்காலி உள்ள அந்த மேஜை காலியானது. குணால் அங்கு அமர்ந்து திவ்யா என்று கை அசைத்து வா என்றான்.
திவ்யாவந்து அமர்ந்தவுடன், “சரி, உனக்கு என்ன வேணும்? நான் போய் வாங்கிட்டு வரேன்”.
கிருஷ் இரண்டு ப்ளேட் சமோசாவையும் டம்மேட்டோ கிச்சப் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தான்.
“திவ்யா..எடுத்துக்கோ”.
“சாரி கிருஷ் எனக்கு சமோசா பிடிக்காது..ரியலி சாரி ப்ரோ”.
“ஓ நோ..ஐ அம் சாரி..நான் போய் வேற வாங்கிட்டு வரேன்” என்று கிருஷ் எழுந்தான்.
“பரவாயில்ல.. குணால்கிட்ட என்ன வேணும்னு சொல்லிட்டேன்..நீ உட்கார்ந்து சாப்பிடு”, என்றாள்.
கிருஷ் முகம் வெளிறிப் போனது. குணால் முன் திவ்யா சமோசாவை நிராகரித்தது அவனுக்கு அவமானமாக இருந்தது. அவன் முகம் மாறுவதை திவ்யா கவனித்தாள்.
“கிருஷ், உனக்காக சமோசா மேலே இருக்கிற கிரிஸ்ப்பி பார்ட் மட்டும் எடுத்திக்கறேன்..ஒகே?” என்று புன்னகைத்தாள்.
“தேங்க் யூ திவ்யா..அப்பறம் உங்கிட்ட ஒன்னு கேட்கணும்..குணால் வரதுக்குள்ள கேட்கணும் நினைக்கிறேன்”.
“என்ன கேளு கிருஷ்”.
“வந்து…குணால் இஸ் நாட் தட் கிரேட் கய்..சோ..என்ன சொல்ல வரேனு புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்” என்றான், காதைச் சொறிந்தபடி.
திவ்யா அமைதியாக அவன் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். குணால் வருவதற்கு முன், “கிருஷ்..நீ எப்ப இந்த ஸ்கூல்ல ஜாய்ன் பண்ண? எப்பத்துல இருந்து உனக்கு குணால தெரியும்?”
“ஏன் கேட்கிற?”
“சும்மா சொல்லேன்”, என்றாள்.
“லஸ்ட் இயர்தான் ஜாய்ன் பண்ணேன்….அவனுக்கும் எனக்கும் ரொம்ப பழக்கமில்ல. நீ வந்த அப்பறம்தான்..அவன் கிட்ட ரெண்டு வார்த்தை பேசறேன்..ஆனா மை கட் சே..ஹி இஸ் நாட் கிரேட்”. என்று சொல்லி முடித்தான்.
“நானும் குணாலும் செகண்ட் கிரேட்ல இருந்து ப்ரெண்ட்ஸ். இந்த நாலு வருஷமாதான் டச்ல இல்ல. ஹி இஸ் எ குட் கய் கிருஷ்”, என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், இரண்டு ப்ளேட் வடா பாவுடன் குணால் வந்தான்.
அப்போது அங்கிருந்த மாணவன் ஒருவன் கிருஷிடம் ஓடி வந்து, “கிருஷ் பிரின்சிபல் உன்ன கூப்பிடறார்” என்றான்.
கிருஷ் அங்கிருந்து கிளம்ப குணால் நிம்மதியாக திவ்யாவுடன் வடா பாவ் சாப்பிட ஆரம்பித்தான்.
“குணால், கிருஷ்க்கும் உனக்கும் ஏதாவது ப்ராப்ளமா?”
“நத்திங் பர்சனல் திவ்யா..ஏன் கேட்கிற?”
“சும்மாதான்”
“ஆனா..அவன் உன்ன இம்ப்ரெஸ் பண்ண என்னவோ பண்றான்..நான் எதையாவது சொன்னா நீ, “அதெல்லாம் இல்லடானு”, என் வாய மூடிடுவ. ஜஸ்ட் பீ கேர் புல். போன வருஷம் மட்டும் நாலு கேள் ப்ரெண்ட மாத்தினான். சரியான டைம் பாஸ். ஆனா படிச்சிடுவான்”.
“ஓகே,..ஓகே..அத நான் ஹேண்டல் பண்ணிப்பேன்..நீ இந்த வாரம் ப்ரீயா. மிர்திப் சிட்டி செண்டர் போகலாம். வீட்ல பர்மீஷன் கேட்டுச் சொல்லு” என்றாள்.
“ஆனா..கிருஷ் வந்தா நான் வர மாட்டேன் இப்பவே சொல்லிட்டேன்…”.
“நீ, நான், நம்ம பழைய ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர்”.
“அது யார்?”
“உனக்கு சர்ப்பரைஸ்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்தாள். குணால் அவளைப் பின் தொடர்ந்தான்.
(தொடரும்)..
Discover more from Naseema Razak
Subscribe to get the latest posts sent to your email.







