
15 Feb அணிலாக இருந்த தருணம்
வாழ்க்கையில் சில தருணங்கள் மன நிறைவைத் தரும். அப்படியொரு நிகழ்வு சென்ற வாரம் நடந்தது.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கும் தன்னார்வலர்களோடு சேர்ந்தேன்.
திருச்சிக்கு அருகில் உள்ள புதுர்பாளையத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில், 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூமில் வகுப்பு எடுத்தேன்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ் பேசும் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள்.
தமிழ் பேசும் என்னைப் பார்த்து, மாணவர்கள் குதூகலமானார்கள். என்னிடம் தமிழில் சந்தேகங்களைக் கேட்டு புரிந்து கொண்டார்கள். அது அவர்களுக்கு இன்னும் சுலபமாக இருந்ததை உணர்ந்தேன்.
தொடர்ந்து இவர்களுக்கு ஆங்கிலம் பேசும் வகுப்பு எடுக்க,தமிழ் பேசும் தன்னார்வலர்கள் வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸப் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Sorry, the comment form is closed at this time.