ஷார்ஜா Archives - Naseema Razak
205
archive,tag,tag-205,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive
Blog / 06.03.2023

பயணம் செய்யும்போது பல முறை மயானங்களைக் கடந்து இருக்கிறேன். ஒருவிதமான அச்சம்தான் அப்பொழுது இருந்தது. ஒரு வேளை அன்றைய வயது காரணமாக இருந்திருக்கலாம். சமீபத்தில் எங்கள் நெருங்கிய உறவினர் காலம் சென்றார். மிகச் சாந்தமான நல்ல மனிதர். அவ்வப்போது அவரை நினைத்துக்கொள்வதும் உண்டு. இன்றோடு நாற்பது நாள் முடிந்தது. அவர் சாந்தி கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்ய ரஸாக் கிளம்ப, நானும் சேர்ந்துகொண்டேன். மயானத்திற்கு வெளியில், வண்டியில் என்னை காத்திருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் உள்ளே சென்றார். பழைய கார்களின் உதிரிப் பாகங்கள் விற்கும் கடைகள் வரிசையாக இருந்தன. சிறிது நேரத்தில் திரும்பியவர், “பெண்களும் உள்ளே வரலாமாம்" என்று சொல்ல,மயானத்திற்குள் வண்டி சென்றது. எனது முதல் மயானப் பயணம். பார்வை படும் இடம் எல்லாம் மிக நேர்த்தியான வரிசையில் கல்லறைகள் தெரிந்தன. மனத்தில் ஒரு விதமான வெறுமை தொற்றிக் கொண்டது. இவர்கள் எல்லாம் வாழ்க்கையின் பிடியிலிருந்து விடுதலையாகி நிம்மதியாக உறங்குவதுபோல்...