அன்னை மொழி அறிவோம் Archives - Naseema Razak
211
archive,tag,tag-211,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

அன்னை மொழி அறிவோம் பள்ளிக் கூடத்தின் ஐந்தாம் ஆண்டு விழா தமிழ் நாட்டை தாண்டினலே  தமிழ் மொழி இல்லாத பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைப் படிக்க வைக்கும் நிலையே அதிகம்.  கடல் தாண்டி இருக்கும் அமீரகம் மட்டும் விதிவிலக்கா என்ன? தோழி அனுராதா கங்காதரன் ஐந்து வருடங்களுக்கு முன் தன் மகன்களுக்காகத் தமிழ் வகுப்புகளைத் தேடினார். பலன் இல்லை. இப்படியே விட்டால் குழந்தைகள் தமிழ் தெரியாதவர்களாக வளர வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை உணர்ந்தார்.  அந்தப் பணியைத் தானே ஆரம்பித்து வைக்க முடிவு செய்தார். அனுராதா, லிட்டில் ஸ்ப்ரோட்ஸ் என்ற நர்ஸரி வைத்து நிர்வகித்து வருகிறார்.  பள்ளி இல்லாத நேரங்களில் தமிழ் சொல்லிக் கொடுக்கும் வகுப்பைத் தொடங்கி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதுவும் ஐந்து பைசா வாங்காமல் இலவசமாகச் சொல்லிக் கொடுத்து வருகிறார். நல்ல எண்ணம் எங்கு தோன்றினாலும் அது ஈடேற எல்லாம்...