29 Mar ‘கமன்’
ஜப்பானின் ஹைக்கூ கவிதைகள் பிரபலமானது போல் நம்மிடையே ‘கமன்’ பிரபலமாகவில்லை. இது ஜப்பானியக் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு தத்துவம். வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு முழுமையான அணுகுமுறை என்றும் சொல்லலாம். எதிர்பாராத ஒன்று நடக்காமல் இருப்பதில்லை. ஏதோ ஓர் இழப்பு, ஒரு துரோகம், தோல்வி என்று அவ்வப்போது நம்மை உண்டு இல்லை என்று செய்துவிடுவது வாழ்க்கையின் இயல்பு. அப்படி ஒன்று நடக்காமல் தடுக்க நம் யாராலும் முடியாது. ஆனால், அதை எப்படிக் கையாள வேண்டும் என்கிற முடிவும் தேர்வும் நம்முடையது. பொறுமையாக அந்த விஷயத்தை எதிர்கொள்வது, காத்திருப்பது என்று கமனைச் சுருக்கிக் கொள்ள இயலாது. நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, சூழ்நிலைகளை அமைதியாக எதிர்கொள்ளும் திறனைக் கமன் கற்றுத் தருகிறது. தற்காலிக இன்பதுன்பங்களைத் துறந்து நீண்டகால இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் ஒரு மனநிலையை ’ கமன்’ தரும். நம் மனம் கவலைகளைப் பெரிதுபடுத்திப் பார்க்கும் இயல்புடையது. அந்த இயல்பிலிருந்து விடுவித்துக் கொள்ள கமன் அவசியம். அது மட்டுமல்ல, கமன்...