சூஃபி ஆகும் கலை – நூல் அறிமிகம்
எழுத்தாளர் : கோகிலா பாபு வாழ்க்கைத் தத்துவங்களை குட்டி குட்டிக் கதைகள் வழியே சொல்வது எல்லா மதங்களிலும் இருக்கும் வழக்கம். இஸ்லாத்தின் ஒரு பிரிவான சூஃபி தத்துவங்கள் கதைகளாக உலகம் முழுவதும் பிரபலம். சிறிய கதைகளாக இருப்பாதால் பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தகம் என்று பலர் நினைப்பார்கள். குழந்தைகளும் படிக்கலாம். ஆனால் இது பெரியவர்களுக்குமானது. அளவில் சிறிதாக இருந்தாலும் இவை விளக்கும் வாழ்வியல் உண்மைகள் பெரியது. படிப்பவரின் வயதுக்கும் மனதுக்கும் ஏற்ற புரிதலை உண்டாக்குவது. இந்தப் புத்தகத்தின் முதல் கதையும் அதைத்தான் சொல்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூமியின் கதைகளையும், மேலும் சில பழைய கதைகளையும் சேர்த்து தொகுத்துள்ளதாகச் சொல்கிறார் நூலாசிரியர். ஐம்பது கதைகளில் ஐந்தைத் தவிர மற்ற அனைத்தும் எனக்குப் புதியவை. ஒன்றிரண்டு பக்கங்களில் தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன. தேவாமிர்தம், வழிப்பிள்ளையாருக்கு உடைத்த தேங்காய் என, எனக்குப் பழகிய வார்த்தைகளும் கதைகளில்...