மராம்பு விமர்சனம் -2
நன்றி Mani Meenakshi Sundaram . நூலின் பெயர் : மராம்பு நூலாசிரியர் : நசீமா ரசாக் முதல் பதிப்பு : ஆகஸ்டு'2022 பக்கங்களின் எண்ணிக்கை : 102 விலை: ரூபாய்.130 வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை - 600042 சங்ககால நூல்களில் பாலை நில மலரெனக் குறிப்பிடப்படும் 'மராம்பு' என்னும் மலரின் பெயரைத் தலைப்பாகக் கொண்டுள்ளது இந்நூல். இத்தலைப்பு தமிழகத்தின் பாலை நிலங்களில் காணப்படும் மராம்பு மலரை,தாய்நாட்டை விட்டு வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுடன் ஒப்பீடு செய்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த, துபாயில் வசிக்கும் எழுத்தாளர் நசீமா ரசாக் கின் இரண்டாவது குறுநாவல் இந்நூலாகும். இந்நூல் எளிய முறையில் கதை நகர்த்தும் குறுநாவலாக இருந்தாலும், நான்கு பெண்களைச் சுற்றிச் சுழலும் சிறுநூலாக இருந்தாலும் ,தம் குடும்ப வறுமை போக்க அரபு நாடுகளில் கூலி வேலை செய்யும் பெண்களின் துயர வாழ்வை மிகச் சிறப்பாகவே முன்னிறுத்துகிறது. அன்றிலிருந்து இன்றுவரை நாமும் கொஞ்சம் வாழ்ந்துவிட மாட்டோமா,நம்...