பேயோன் Archives - Naseema Razak
210
archive,tag,tag-210,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

எனக்கு அறிமுகமான காலம் தொடங்கி இணையத்தில் நிறையப்பேர் புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இணையம் பிறப்பித்த எழுத்தாளர் என்று பேயோனைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அவர் மக்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்; ட்விட்டருக்காகப் புனைபெயரில் எழுதுகிறார் என்று பலபேர் சொன்னார்கள். ஜெயமோகன் தொடங்கி, கோணங்கி வரை பலபேரது பெயர்கள் பேயோனுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டுக் கைவிடப்பட்ட கதை அநேகமாக தமிழ் ட்விட்டர்வாசிகள் எல்லோருக்கும் தெரியும். சிற்றிதழ்களாலும் பேரிதழ்களாலும் கைவிடப்பட்ட ஓர் இலக்கிய நிராயுதபாணி என்று நண்பரொருவர் சொன்னார். எத்தனை அபத்தம் இது. பேயோனின் எழுத்தை வாசிக்க நேரும் எந்த ஓர் எடிட்டரும் துள்ளிக் குதித்து அள்ளிக்கொள்ளாதிருக்க வாய்ப்பே இல்லை. சுய எள்ளல் போர்வையில் அவரே சொல்லிக்கொண்டாலும் சந்தேகமின்றி,  சமகால, தனித்துவ எழுத்துதான் அவருடையது. சந்தேகமில்லை. பேயோனின் பலம் அவரது அபாரமான நகைச்சுவை உணர்வில் உள்ளது. பலநாள் அலுவலகத்தில் வேலைக்கிடையே அவரது...