மணல் பூத்த காடு – முஹம்மது யூசுப்
#மணல்_பூத்த_காடு முஹம்மது யூசுப் நண்பர் யூசுப் அவர்களின் எழுத்து எனக்கு புதியது இல்லை என்றாலும் அவர் எழுதிய முதல் நாவல் படிக்கும் வாய்ப்பு இப்பொழுது தான் கிட்டியது. இது நாவலா? பல கதைகளின் தொடரா? பயண நூலா? வரலாற்றுப் புத்தகமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் "ஆம்" என்ற பதிலை வாசகன் தர எழுத்தாளர் எடுத்த புதிய வடிவமைப்பு இந்த நாவல். ஒருவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள அவனுடன் பயணம் செய்தால் போதும் என்ற நபிகள் நாயகத்தின் மொழியை முன்னுரையில் வைத்து நாவல் தொடர்கிறது. வேர் பதியாத சொந்த மண்ணிலிருந்து உருவி வளைகுடா சென்று வேர் பிடித்தும் பிடிக்காமல் வாழும் பலரோடு பிரதிபலிப்பாக "அனீஸ்" என்ற கதாபாத்திரம் மூலம் நாவல் நகர்கின்றது. நாவல் முழுக்க ரியாத்தில் இருந்து பல மைல்கள் தொடர்ந்து பயணம் மேற்கொள்வது சுவாரசியத்திற்குச் சிறிது தடையாக இருந்தாலும் அதனூடே கிடைக்கும் அனுபவங்கள்...