24 Sep ஹெமிங்வே
திறமையானவர்கள், வெற்றியாளர்கள் என்று யாரும் வானத்திலிருந்து குதித்து வருவதில்லை. அல்லது பிறந்த நொடியில் வெற்றியாளன் என்று கொண்டாடப்படுவதில்லை. அப்பா மருத்துவர். அம்மா தீவிர மதப்பற்றாளர். அவர் குழந்தைப் பருவம் அன்றைய மற்ற அமெரிக்கக் குழந்தைகளை விட வசதியாக இருந்தது. அம்மா கண்டிப்பானவர். மாணவனாக இருந்த போது இரண்டு முறை வீட்டை விட்டு ஓடி இருக்கிறார். அம்மாவின் கண்டிப்பிலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்பாவோடு வேட்டைக்குச் செல்வது வழக்கம். வேட்டையாடுவதிலும்,மீன்பிடிப்பதிலும் அவருக்கு...