13 Oct ஜெஃப்ரி ஆர்ச்சர்
எண்பத்தி மூன்று வயதாகும் அந்த முதியவருக்காக இன்றும் வாசகன் காத்துக் கொண்டிருக்கிறான். அவர் பிறக்கும் போது தந்தை இழப்பு. தாய் லண்டனில் இருக்கும் வெஸ்டன் நகரின் லோக்கல் செய்தித்தாளில் வாராந்திர பத்தி எழுத்தாளர். இலக்கியம், வரலாறு பாடங்களில் சிறந்து விளங்கிய அந்த இளைஞன் இராணுவம், காவல்துறை, ஆசிரியர் என்று கிடைத்த வேலை எதையும் விடவில்லை. 1963-ஆம் ஆண்டு ஆக்ஸ்பார்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் டிப்ளமோ படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்திருக்கிறார் என்று பலர் சந்தேகப்பட்டார்கள். ஆனால் அவர் விளையாட்டுத் துறையில் சி̀றந்து விளங்கினார். ஆக்ஸ்பார்ட் அவரை அதெலெட் க்ளபின் பிரெஸிடெண்ட் என்ற பதவி கொடுத்து மூன்று வருடம் அங்கே இருக்க வைத்தது. அதற்குப் பின் தொண்டு நிறுவனம் ஒன்றில் நிதி திரட்டுபவராக வேலை செய்தார். அரசியல் ஆர்வம் வந்தது. உள்ளூர் கவுன்சிலர் என்று ஆரம்பித்து...