Naseema Razak Archives - Page 2 of 2 - Naseema Razak
197
archive,paged,tag,tag-naseema-razak,tag-197,paged-2,tag-paged-2,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

நம் அனைவருக்கும் அரபிப் பெண்களைப் பற்றி பல அபிப்ராயங்கள் உண்டு. கல்வி இல்லாதவர்கள். விரைவில் திருமணம் நடந்துவிடும். அடிப்படைவாதத்தால் அல்லல் படுகிறவர்கள். இவை அனைத்தும் உண்மைதானா? சவூதி அரேபியப் பெண்கள் மட்டும் அரேபியர்களா?வேறு அரபிப் பெண்கள் இருக்கிறார்களா?இப்படிப் பல சுவாரஸ்யமான தகவல்கள் இன்று வளிவந்த மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் இருக்கின்றது. கீழே உள்ள சுட்டியைச் சொடக்கவும்.   https://www.madraspaper.com/arab-women-today/ ...

வாழ்க்கையில் சில தருணங்கள் மன நிறைவைத் தரும். அப்படியொரு நிகழ்வு சென்ற வாரம் நடந்தது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கும் தன்னார்வலர்களோடு சேர்ந்தேன். திருச்சிக்கு அருகில் உள்ள புதுர்பாளையத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில், 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூமில் வகுப்பு எடுத்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ் பேசும் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். தமிழ் பேசும் என்னைப் பார்த்து, மாணவர்கள் குதூகலமானார்கள். என்னிடம் தமிழில் சந்தேகங்களைக் கேட்டு புரிந்து கொண்டார்கள். அது அவர்களுக்கு இன்னும் சுலபமாக இருந்ததை உணர்ந்தேன். தொடர்ந்து இவர்களுக்கு ஆங்கிலம் பேசும் வகுப்பு எடுக்க,தமிழ் பேசும் தன்னார்வலர்கள் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸப் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். +91 9920597123 +971 544320123 #smart_life #share_knowledge...

என் பெயரைச் சுருக்கி என் நண்பர்களும்,குடும்பத்தாரும் விளிப்பது வழக்கம். ஜீன், மெளலா,பிசாசு கூட இருக்கு. 'அமியா ' என்று மகள்கள் அழைக்க, பெரிய தம்பி மகன்கள் 'நஸீ அமியா' என்பார்கள். மீண்டும் எனக்காக ஒரு புது பெயர் வைக்கப் பட்டுள்ளது. என் சின்ன தம்பி மகனுக்கு ஆறு மாதம் ஆகிறது.அவன் என்னை எப்படி அழைக்க வேண்டுமென்று,சில தினங்களுக்கு முன் தம்பி பெயர் தேடியது சுவாரசியமான நிகழ்வு. அவனுக்காக மட்டும் இனி நான் #டியா. டியா என்றாலும் ஸ்பானிஷில் அத்தை தானாம்....

இன்றைய பதின்பருவக் குழந்தைகள் பிரச்சனைகள் சூழ்ந்த உலகில் மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். 'நீல் & ஹீல்' (Kneal & Heal) முதலில் செவிமடுத்து பிரச்சனையைக் கேட்டு உள்வாங்கி , அவற்றை(ஹீலிங்) குணப்படுத்துதல். நூலாசிரியர் உளவியல், தியானம், ஹீலர் என குழந்தைகள் உலகில் ஒரு ஆலோசகராக அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கண்டு கேட்ட உணர்ந்த சம்பவங்களே இந்தத் 'தளிர்' . இக்கதையின் நாயகி பர்வீன், கணவர் சலீம் இரண்டு பெண் குழந்தைகளுடன் துபாயில் குடும்பத்துடன் வசிக்கிறார். பர்வீனது புலம்பெயர் வாழ்வின் அனுபவங்கள், சிறு சிறு அத்தியாயங்களாக நம் கண்முன் விரிகிறது. மணற் புயலில் ஆரம்பிக்கும் நாவல் , சிறப்பான அனுபவங்களுடன் தெளிந்த நீரோடை போல் செல்கிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு உளவியல் மையம் சென்று, அங்கு வந்திருப்பவருக்கு ஆறுதல் கூறி கவுன்சிலிங் செய்து மீண்டும் இல்லம் திரும்பி குடும்பப் பணிகளை கவனிக்கும்...