15 Feb அணிலாக இருந்த தருணம்
வாழ்க்கையில் சில தருணங்கள் மன நிறைவைத் தரும். அப்படியொரு நிகழ்வு சென்ற வாரம் நடந்தது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கும் தன்னார்வலர்களோடு சேர்ந்தேன். திருச்சிக்கு அருகில் உள்ள புதுர்பாளையத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில், 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூமில் வகுப்பு எடுத்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ் பேசும் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். தமிழ் பேசும் என்னைப்...