15 Feb தளிர் தந்த தருணம்
சில உறவுகள் கேட்கும் கேள்வி,”பொஸ்தகம் லாம் போடற,எதாவது லாபம் கீபம் ? “…. தூர உறவுகளின் இழுவைகளைப் புன்னகைத்துக் கடந்து விடுவேன்…
பிடித்து ஒரு விஷயம் செய்யும் போது கிடைக்கும் நிறைவுக்கு ஈடில்லை என்று சொன்னால் பைத்தியம் என்பார்கள்.இப்ப அதுவல்ல விஷயம்.
#தளிர் எழுதியதால் ஒரு அதிசயம் நடந்தது.
இரண்டு நாளைக்கு முன் வாட்ஸப்பில் ஒரு குறுஞ்செய்தி.” நஸீ, தளிர் படிச்சிட்டேன், ரொம்ப நல்லா இருக்கு”.
‘ நஸீ ‘ என்று மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்னைக் கூப்பிடுவது வழக்கம்.ஆனால் இந்த எண் என் அலைபேசியிலும் இல்லை.
தொடர்ந்து வந்த குறுஞ்செய்தி மூலம் ஐந்தாம் வகுப்பு வரை என்னோடு படித்த வகுப்புத் தோழி என்று தெரிந்து கொண்டேன்.எப்படியோ நினைவுகளைத் தோண்டி, தூசி தட்டி எடுக்க, அவள் முகம் மங்கலாக ஞாபகம் வந்தது.
அதற்கு அடுத்த வந்த வாய்ஸ் மெசேஜ், ” நஸீ, என் பையன் அக்கம் பக்கம் எல்லாம், எங்கம்மா பிரெண்ட் புக் எழுதி இருக்காங்க, அதை வாங்க, அம்மா புக் பேர் போயிருக்காங்க, என்று மகிழ்ந்ததைச் சந்தோஷமாகச் சொன்னாள்.
“நானும் புக் பேர் வந்திருந்தேன், தெரிந்து இருந்தால் கண்டிப்பா, உன்னை மீட் பண்ணி இருப்பேன்” என்றேன்.
“நீ வந்து இருக்கிறனு தெரியும்,பள்ளிக்குப் பின் காண்டாக்ட் இல்ல, அதான்… ஒரு தயக்கம் ” என்றாள்.
என்னைப் பார்க்கத் தயங்கியவள், #தளிர் வாங்கி படித்து, அவள் அனுப்பிய அத்துனை மெசேஜும் அன்பால் நிறைந்தவை.
தொடர்ந்து எழுது நசீ…என்று அவள் இறுதியாகச் சொன்னதை இறுகப் பற்றிக் கொண்டேன்.
அனுஷா, உனக்கும் ஶ்ரீஹரிக்கும் என் அன்பு.
Sorry, the comment form is closed at this time.