Skip to content
Blog

நன்றி நிக்கோலஸ்

May 28, 20250 second read
எழுத உட்காருவதற்கு முன் சில புல்லட் பாய்ண்ட்களை நோட்டில் எழுதிக் கொள்வேன். கதையோ, கட்டுரையோ எதுவாக இருந்தாலும் இது தான் ஆரம்பம். அதற்குப் பிறகு டைப் செய்ய ஆரம்பிப்பேன். டைப் செய்யும் போது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். வேர்ட் எல்லாம் சரி வராது  என்று தேடிக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அப்போது, சிம்பிள் டெக்ஸ்ட் சரியாக இருக்கும் என்று பா ரா சொன்னார். இரண்டு வருடங்களாக அதைத் தான் பயன்படுத்தி வருகிறேன். திடீரென்று ஒரு நாள் iA writer என்று ஒன்றை அனுப்பினார். எழுதும் போதே எழுதும் வரிகளில் மட்டும் கவனம் இருக்க அது மிகவும் சௌகரியமாக இருந்தது. நீண்ட வாக்கியங்கள் வந்து விழுந்தால், அதை அப்போதே காலி செய்யும் கலை கை வந்தது. சிம்பிள் டெக்ஸ்ட் எல்லாம் மறந்தே போனது. ஆனால் எல்லாம் ஒரு வாரத்திற்கு மட்டுமே.  வாங்கிவிடலாம் என்றால் ஓர் எண்ணெய்க் கிணறு விலை சொன்னான். வேறு வழியின்றி மீண்டும் சிம்பிள் டெக்ஸ்ட் பக்கம் வந்தேன். சில தினங்களுக்கு முன் பா ராவின் இணையத்தளத்தில் uFocus பற்றி எழுதி இருந்தார். காத்திருந்ததற்குப் பலன் கிடைத்தது. கரும் பலகையில் நான் டைப் செய்வது மட்டும் வரும். எந்தக் கவனச் சிதறலும் வர வாய்ப்பே இல்லை. இது போதாது என்று டைப் ரைட்டர் சத்தத்தையும் வைத்துக் கொள்ளலாம். நிம்மதியாக எழுதக் குறைந்தபட்ச சொகுசு கூட இல்லையென்றால் எப்படி. சிறப்பாக இருக்கும் அனைத்தும் எளிமையாக இருக்கும் என்பது சரியே.
டக்..டக்..டிகிடி..டக்..டகடகடக..டப்..டப்..டக்…என்று கேட்டுக் கொண்டே டைப் செய்துக் கொண்டிருக்கிறேன். இதை உருவாக்கிய நிகோலஸ்க்கும் இதைப் பற்றி அறிமுகம் செய்த பாராவுக்கும் நன்றி.

Discover more from Naseema Razak

Subscribe to get the latest posts sent to your email.

Share this Article
Further Reading
Trending Articles

No Comments

Back To Top
error: Content is protected !!

Discover more from Naseema Razak

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading