மெட்ராஸ் பேப்பர் Archives - Naseema Razak
161
archive,tag,tag-161,wp-theme-bridge,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,transparent_content,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

இன்றைய பதின்பருவக் குழந்தைகள் பிரச்சனைகள் சூழ்ந்த உலகில் மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். 'நீல் & ஹீல்' (Kneal & Heal) முதலில் செவிமடுத்து பிரச்சனையைக் கேட்டு உள்வாங்கி , அவற்றை(ஹீலிங்) குணப்படுத்துதல். நூலாசிரியர் உளவியல், தியானம், ஹீலர் என குழந்தைகள் உலகில் ஒரு ஆலோசகராக அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கண்டு கேட்ட உணர்ந்த சம்பவங்களே இந்தத் 'தளிர்' . இக்கதையின்...

மெட்ராஸ் பேப்பர் ஆரம்பம் முதல் பா. ராகவன் அவர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தனது புக்பெட் வகுப்புக்கு வந்த சிறந்த  மாணவர்களிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து  அடுத்த கட்ட பயிற்சிக்குத் தயார் செய்தார். மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுத வைத்தார். வகுப்புக்கு வந்தார்கள் சென்றார்கள் என்று இல்லாமல், வகுப்புக்கு வந்தார்கள் வென்றார்கள் என்ற இடத்திற்குத் தனது மாணவர்களை எழுத்தாளர்களாக மாற்றினார்....

நாளது வரை பார்க்காத, அனுபவிக்காத எல்லாவற்றையும் கடந்து, பெருமூச்சு விட்டபடிதான் 2022-ம் ஆண்டின் தொடக்கம் அமைந்தது. நான்கு வருடங்களாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த ‘பிரைனோ கிட்’ என்ற என் நிறுவனத்தை இழுத்துச் செல்ல பேய்ப் பலம் தேவையாக இருந்தது. முதலிலிருந்து ஆரம்பிக்க மனமும் தயாராகிக் கொண்டிருந்தது. என் நிறுவனமானது நடனம், பாட்டு, இசை, பள்ளிப் பாடங்களுக்கான டியூஷன்,...

சென்னை புத்தகக் காட்சிக்கு வரப் போகும் #தளிர் நாவல் அறிமுகம். நன்றி Pa Raghavan சார். பல வருடங்களுக்கு முன்பு மெல்லினம் என்றொரு நாவலை எழுதினேன். கல்கியில் அது தொடராக வந்தது. இரண்டு குழந்தைகள். ஒரு நாய். ஒரு குரங்கு. ஓர் அணில். ஒன்றிரண்டு பட்டாம்பூச்சிகள். இவ்வளவுதான் கதாபாத்திரங்கள். வாரப் பத்திரிகையில் இம்மாதிரியான கதையெல்லாம் எடுபடுமா என்று அங்கே...

#தளிர் நாவல் முடித்து, மூச்சு விடும் நேரத்தில், இப்படி ஒரு காரியத்தை ஜின் செய்யாமல் இருந்திருக்கலாம் . ஒரு நாவலை முழுதாக முடிக்க நான் பட்ட பாடு என் முதுகுக்கும் , மருத்துவருக்கும் தான் வெளிச்சம். அதற்குள் என் கையை இழுத்துக் கொண்டு கணினியோடு கட்டுவது எல்லாம் அராஜகம் . நாவலை முடித்திருந்த ,கொண்டாட்ட மனநிலையை எப்படி...

எதிர்பாராமல் கிடைக்கும் சிறிய சந்தோஷம் கூட மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துவிடும். #மெட்ராஸ்_பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக இருந்து, இப்போது உதவி ஆசிரியராகப் புதிய பொறுப்பேற்றிருக்கிறேன். எனக்கு கிடைத்த இந்த பெரும் வாய்ப்பு சந்தோஷத்தை மட்டும் அல்ல மன நிறைவையும்,கொடுக்கிறது. என் பேனாவை இன்னும் இறுகப் பற்றிக் கொள்ள இதை விட வேறு என்ன காரணம் இருக்க முடியும்? மெட்ராஸ்...