Blog / 25.10.2023
இயன் ஃப்ளெமிங்
சிலருக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்றால் இடம் மாற்றம் தேவை. வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அது சொகுசாகத் தெரியும். ஆனால் அவர்களுக்கு அது தேவையாக இருக்கும். முக்கியமாகப் படைப்புச் சார்ந்த வேலைகளில் இருப்பவர்களிடம் இந்த குணத்தை பார்க்கலாம். மாடமாளிகை இல்லை என்றாலும் ஒரு மாற்றம், ஒரு தனிமை. ஆனால் பிரிட்டிஷ் எழுத்தாளர் இயன் ஃப்ளெமிங் தன் இலக்குக்காக ஜமாய்க்கா என்ற நகரில் ஒரு மாளிகையைக் கட்டினார். நானோ நீங்களோ அதே இலக்குக்குப் பின் சென்றால் அதற்காக ஒரு அறை கட்டுவோமா என்பது சந்தேகம்..ஆனால் ஃப்ளெமிங் அதிர்ஷ்டசாலி. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் கடற்படையின் முக்கிய அதிகாரியாக இருந்த இயன் ஃப்ளெமிங் போர் ஆபரேஷன் பலவற்றில் வேலை செய்துள்ளார். அதில் ஒன்று கோல்டன் ஐ. தான் ஆசையாகக் கட்டிய மாளிகைக்கும் கோல்டன்...