என் முதல் காதல் - Naseema Razak
15802
post-template-default,single,single-post,postid-15802,single-format-standard,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive

என் முதல் காதல்

முதலில் குப்புறப் படுத்தது, முதலில் எழுந்து நின்றது, முதல் நடை, முதலில் விழுந்து முட்டி சிராய்த்தது – இதெல்லாம் நமக்கு நினைவிருக்காது. நம் பெற்றோருக்கு இருக்கும். நமக்கு முதல் திருட்டுத்தனம் நினைவிருக்கும். முதல் காதல் நினைவிருக்கும். முதல் தோல்வி, முதல் வெற்றி இதெல்லாம் மறக்க வாய்ப்பில்லை. எழுதுபவளுக்கு முதல் புத்தகம்.

‘என்னைத் தேடி…’ நான் எழுதிய முதல் நாவல். உண்மையில் அதில் என்னைத்தான் தேடினேனா, என்னைப் போலவே இருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் எனக்குள் தேடினேனா என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அன்று தொடங்கிய தேடல் இன்றுவரை ஓயவில்லை; நான் இருக்கும் வரை ஓயப் போவதும் இல்லை.

நெடுங்காலமாகப் பலபேர் கேட்டுக்கொண்டிருந்ததுதான். இப்போது இது சாத்தியமாகியிருக்கிறது.

‘என்னைத் தேடி’ இனி கிண்டிலில் கிடைக்கும். நீங்கள் வாங்கியும் படிக்கலாம், வாடகைக்கு எடுத்தும் படிக்கலாம். நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான்.

எப்படிப் படித்தாலும், படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எனக்கு எழுதுங்கள். அமேசானிலேயே ரெவ்யு எழுதினால் நீங்கள் சமத்து சர்க்கரைக் கட்டி.

புத்தகத்தைப் பார்வையிட ,

https://amzn.to/3ISntja

No Comments

Sorry, the comment form is closed at this time.