12 Oct சிட்னி ஷெல்டன்
1927 ஆம் ஆண்டு சிகாகோ நகரிலொரு பத்து வயதுச் சிறுவன் தான் எழுதிய கவிதைத் தாளோடு சுற்றிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் முகத்தில் சந்தோஷத்தின் குதூகலம். கவிதைத் தாளிற்குப் பதில் கையில் பத்து டாலர் இருந்தது. அவனுக்குக் கிடைத்த முதல் சம்பளம் அது. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு சம்பாதித்தான். அதிகமாக நாடகக் குழுவில் வாய்ப்புகள் வந்தன. தனது பதினேழாவது வயதில், பெரிய வாய்ப்புகளைத் தேடிச் சென்றவனுக்கு ஹாலிவுட்டில் வாய்ப்பு. வாரத்திற்கு இருபத்திரண்டு டாலர் சம்பளத்தில் ஸ்க்ரிப்ட் ரீடராக வேலை கிடைத்தது. இரவு நேரங்களில் தன்னுடைய சொந்தத் திரைக் கதையை எழுத ஆரம்பித்தான். அதையும் இருநூற்று ஐம்பது டாலருக்கு விற்றான். வாலிபன் என்றால் இராணுவத்தில் சிறிது காலம் இருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. நாடகம் எழுதிக் கொண்டிருந்தவர் இராணுவ பைலட்டாக வேலை செய்தார்....