Home - Naseema Razak
5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-6,page-paged-6,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive
Blog / 06.03.2023

பயணம் செய்யும்போது பல முறை மயானங்களைக் கடந்து இருக்கிறேன். ஒருவிதமான அச்சம்தான் அப்பொழுது இருந்தது. ஒரு வேளை அன்றைய வயது காரணமாக இருந்திருக்கலாம். சமீபத்தில் எங்கள் நெருங்கிய உறவினர் காலம் சென்றார். மிகச் சாந்தமான நல்ல மனிதர். அவ்வப்போது அவரை நினைத்துக்கொள்வதும் உண்டு. இன்றோடு நாற்பது நாள் முடிந்தது. அவர் சாந்தி கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்ய ரஸாக் கிளம்ப, நானும் சேர்ந்துகொண்டேன். மயானத்திற்கு வெளியில், வண்டியில் என்னை காத்திருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் உள்ளே சென்றார். பழைய கார்களின் உதிரிப் பாகங்கள் விற்கும் கடைகள் வரிசையாக இருந்தன. சிறிது நேரத்தில் திரும்பியவர், “பெண்களும் உள்ளே வரலாமாம்" என்று சொல்ல,மயானத்திற்குள் வண்டி சென்றது. எனது முதல் மயானப் பயணம். பார்வை படும் இடம் எல்லாம் மிக நேர்த்தியான வரிசையில் கல்லறைகள் தெரிந்தன. மனத்தில் ஒரு விதமான வெறுமை தொற்றிக் கொண்டது. இவர்கள் எல்லாம் வாழ்க்கையின் பிடியிலிருந்து விடுதலையாகி நிம்மதியாக உறங்குவதுபோல்...

Blog / 24.02.2023

முதலில் குப்புறப் படுத்தது, முதலில் எழுந்து நின்றது, முதல் நடை, முதலில் விழுந்து முட்டி சிராய்த்தது - இதெல்லாம் நமக்கு நினைவிருக்காது. நம் பெற்றோருக்கு இருக்கும். நமக்கு முதல் திருட்டுத்தனம் நினைவிருக்கும். முதல் காதல் நினைவிருக்கும். முதல் தோல்வி, முதல் வெற்றி இதெல்லாம் மறக்க வாய்ப்பில்லை. எழுதுபவளுக்கு முதல் புத்தகம். ‘என்னைத் தேடி…’ நான் எழுதிய முதல் நாவல். உண்மையில் அதில் என்னைத்தான் தேடினேனா, என்னைப் போலவே இருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் எனக்குள் தேடினேனா என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அன்று தொடங்கிய தேடல் இன்றுவரை ஓயவில்லை; நான் இருக்கும் வரை ஓயப் போவதும் இல்லை. நெடுங்காலமாகப் பலபேர் கேட்டுக்கொண்டிருந்ததுதான். இப்போது இது சாத்தியமாகியிருக்கிறது. ‘என்னைத் தேடி’ இனி கிண்டிலில் கிடைக்கும். நீங்கள் வாங்கியும் படிக்கலாம், வாடகைக்கு எடுத்தும் படிக்கலாம். நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். எப்படிப் படித்தாலும், படித்துவிட்டு...

Blog / 15.02.2023

வாழ்க்கையில் சில தருணங்கள் மன நிறைவைத் தரும். அப்படியொரு நிகழ்வு சென்ற வாரம் நடந்தது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கும் தன்னார்வலர்களோடு சேர்ந்தேன். திருச்சிக்கு அருகில் உள்ள புதுர்பாளையத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில், 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூமில் வகுப்பு எடுத்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ் பேசும் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். தமிழ் பேசும் என்னைப் பார்த்து, மாணவர்கள் குதூகலமானார்கள். என்னிடம் தமிழில் சந்தேகங்களைக் கேட்டு புரிந்து கொண்டார்கள். அது அவர்களுக்கு இன்னும் சுலபமாக இருந்ததை உணர்ந்தேன். தொடர்ந்து இவர்களுக்கு ஆங்கிலம் பேசும் வகுப்பு எடுக்க,தமிழ் பேசும் தன்னார்வலர்கள் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸப் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். +91 9920597123 +971 544320123 #smart_life #share_knowledge...

Blog / 15.02.2023

என் பெயரைச் சுருக்கி என் நண்பர்களும்,குடும்பத்தாரும் விளிப்பது வழக்கம். ஜீன், மெளலா,பிசாசு கூட இருக்கு. 'அமியா ' என்று மகள்கள் அழைக்க, பெரிய தம்பி மகன்கள் 'நஸீ அமியா' என்பார்கள். மீண்டும் எனக்காக ஒரு புது பெயர் வைக்கப் பட்டுள்ளது. என் சின்ன தம்பி மகனுக்கு ஆறு மாதம் ஆகிறது.அவன் என்னை எப்படி அழைக்க வேண்டுமென்று,சில தினங்களுக்கு முன் தம்பி பெயர் தேடியது சுவாரசியமான நிகழ்வு. அவனுக்காக மட்டும் இனி நான் #டியா. டியா என்றாலும் ஸ்பானிஷில் அத்தை தானாம்....