Home - Naseema Razak
5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-10,page-paged-10,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive
Blog / 08.12.2022

என் மாணவர்களோடு நிறையப் புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் இந்த படம் மனசுக்கு மிகவும் நெருக்கமானது. இந்த குட்டி வாண்டு பெயர் “காவரில்” என் சென்டரின் கடைக்குட்டி . ஒரு நாள் நான் கதை சொல்லும் போது தானும் சொல்ல வேண்டும், என்று என் அருகில் வந்தான். நான் கதை முடித்த பிறகு, நீ கதை சொல் என்றேன்.என் அருகிலே நின்று கொண்டு இருந்தான், அதுவும் சும்மா இல்லை என் சுண்டி விரலைச் சுரண்டிக் கொண்டே . நான் முடித்த பிறகு கதை சொல்லத் தொடங்கினான்.என்னை அங்கே இருந்து நகர விடாமல் என் கைகளைப் பிடித்துக் கொண்டு கதைத்தான். அவன் கதைப்பது முடியும் வரை, அந்த பிஞ்சு விரல்களும் அந்த அன்பைச் சொல்லிக் கொண்டு இருந்தது....

Reviews / 08.12.2022

#நடைவண்டியில் ஏறி கவிதை படிக்க ஆர்வமாய் பயணித்தேன். அழகான கவிதைகள் ஆழமான சிந்தனைகள் என்ற பக்குவமான எழுத்துக்கள். 25 வருடத்திற்கு முன் எழுதிய அந்த இளைஞனை யோசித்து வியந்தேன். " சுதந்திரம் " மூலம் தந்த தாகம், " சதுரங்கம் " ஆட்டத்தை நடத்தி இறுதியாக எதிரியுடன் கை குலுக்குவதே சுதந்திரம் என்று முடிக்கும் மனம், கடிகார முட்கள் சொல்லும் கம்பீரம், வீரம், ஒரே பாதையில் பயணித்தும் ஒன்றை ஒன்று தடுத்துக் கொள்ளாத நாகரீகம், "நவீன நாடுகடத்தல்", தீ என்று பெண் உணர்வுகளையும் சேர்த்து சமூக சிந்தனைகளை எழுத்துக்களால் செதுக்கி இருக்கின்றார்.இந்த நூலை Brindha Sarathy #பிருந்தா சாரதி அவர்களிடம் இருந்து பரிசாக பெற்றது கூடுதல் சிறப்பு....

Reviews / 08.12.2022

#திருக்கார்த்தியல் நாம் அன்றாடம் வாழ்க்கையில் எங்கோ ஒரு பஸ் ஸ்டாப்பில் சேலை விலகிய அலங்கோலமான பெண்ணை கடந்து இருப்போம் , கிராமங்களில் இருக்கும் மாணவ விடுதிகளைக் கடந்து இருப்போம் , பம்ப் செட்டின் சின்ன அறையை வீடாக கொண்ட குடுபங்களைக் கடந்து இருப்போம் . இப்படி இயல்பாகத் தோன்றும் இந்த மக்களின் வலிகளை ஒவ்வொரு கதைகளில் வரும் கதாபாத்திரம் மூலம் , வாசகர்கள் கடந்து செல்ல முடியாமல் ,அந்த மக்களை கவனத்திற்குக் கொண்டுவந்து இருக்கிறார் ராம். பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை தெரு முழுக்க சமைக்க , மாணவ விடுதியில் தங்கி படிக்கும் செந்தமிழுக்கு, வெறும் வாசனையை மட்டும் தந்த வீதி மக்களின் மீது வந்த கோபம் . காய்ந்துபோன, கெட்டுப்போன அல்வாவை சுவைத்த அவன் நாக்கு, இயலாமையை , ஏமாற்றத்தை அறைந்து சொல்லுகின்றது . அம்மாவும், அப்பாவும்...

Reviews / 08.12.2022

"ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதுவதற்கு முன் கவிதாவிடம் ஒரு கேள்வி " அடுத்த புத்தகம் எப்ப வரும்?...