மராம்பு Archives - Naseema Razak
164
archive,tag,tag-164,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

    நன்றி Mani Meenakshi Sundaram . நூலின் பெயர் : மராம்பு நூலாசிரியர் : நசீமா ரசாக் முதல் பதிப்பு : ஆகஸ்டு'2022 பக்கங்களின் எண்ணிக்கை : 102 விலை: ரூபாய்.130 வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை - 600042 சங்ககால நூல்களில் பாலை நில மலரெனக் குறிப்பிடப்படும் 'மராம்பு' என்னும் மலரின் பெயரைத் தலைப்பாகக் கொண்டுள்ளது இந்நூல். இத்தலைப்பு தமிழகத்தின் பாலை நிலங்களில் காணப்படும் மராம்பு மலரை,தாய்நாட்டை விட்டு வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுடன் ஒப்பீடு செய்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த, துபாயில் வசிக்கும் எழுத்தாளர் நசீமா ரசாக் கின் இரண்டாவது குறுநாவல் இந்நூலாகும். இந்நூல் எளிய முறையில் கதை நகர்த்தும் குறுநாவலாக இருந்தாலும், நான்கு பெண்களைச் சுற்றிச் சுழலும் சிறுநூலாக இருந்தாலும் ,தம் குடும்ப வறுமை போக்க அரபு நாடுகளில் கூலி வேலை செய்யும் பெண்களின் துயர வாழ்வை மிகச் சிறப்பாகவே முன்னிறுத்துகிறது. அன்றிலிருந்து இன்றுவரை நாமும் கொஞ்சம் வாழ்ந்துவிட மாட்டோமா,நம்...

தங்கள் குடும்பப் பொருளாதாரத்திற்காக மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்று தொழிலாளர்களாக வேலை செய்யும் ஐந்து பெண்களின் கதை. ஐந்து பெண்களும் வேறு வேறு மாநிலங்களில் இருந்து துபாய் சென்று ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். வீட்டு வேலை, கால் டாக்ஸி ஓட்டுனர், அழகுக்கலை நிபுணர், அலுவலக உதவியாளர் என்று நான்கு பெண்களுக்கும் ஒவ்வொரு வேலைகள். போலி ஏஜெண்டால் ஏமாற்றமப்பட்ட வள்ளி அந்த அறைக்கு வருகிறாள். அந்த அறையில் வள்ளி மட்டுமே தமிழ்ப் பெண். மொழிகள் வேறாக இருந்தாலும் உணர்வுகளும் பிரச்சனைகளும் மனிதர்களுக்கு ஒரே வகையானவைகள்தான். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, வாழ்வு முறை, பணிச் சூழல், போராட்டங்கள், வருங்காலக் கனவுகள், இவைகளுக்கு நடுவில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள், அந்த சந்தோசங்களை அவர்கள் சேர்ந்து கொண்டாடும் விதம் எல்லாம் நெகிழ்ச்சியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தந்தப் பெண்களின் பிரச்னைகளுக்கேற்ப யதார்த்தமான முடிவுகள். கற்பனைக்...