தளிர் Archives - Naseema Razak
198
archive,tag,tag-198,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive
Reviews / 03.02.2023

இன்றைய பதின்பருவக் குழந்தைகள் பிரச்சனைகள் சூழ்ந்த உலகில் மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். 'நீல் & ஹீல்' (Kneal & Heal) முதலில் செவிமடுத்து பிரச்சனையைக் கேட்டு உள்வாங்கி , அவற்றை(ஹீலிங்) குணப்படுத்துதல். நூலாசிரியர் உளவியல், தியானம், ஹீலர் என குழந்தைகள் உலகில் ஒரு ஆலோசகராக அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கண்டு கேட்ட உணர்ந்த சம்பவங்களே இந்தத் 'தளிர்' . இக்கதையின் நாயகி பர்வீன், கணவர் சலீம் இரண்டு பெண் குழந்தைகளுடன் துபாயில் குடும்பத்துடன் வசிக்கிறார். பர்வீனது புலம்பெயர் வாழ்வின் அனுபவங்கள், சிறு சிறு அத்தியாயங்களாக நம் கண்முன் விரிகிறது. மணற் புயலில் ஆரம்பிக்கும் நாவல் , சிறப்பான அனுபவங்களுடன் தெளிந்த நீரோடை போல் செல்கிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு உளவியல் மையம் சென்று, அங்கு வந்திருப்பவருக்கு ஆறுதல் கூறி கவுன்சிலிங் செய்து மீண்டும் இல்லம் திரும்பி குடும்பப் பணிகளை கவனிக்கும்...