பொன் விளைந்த பூமி
சதுப்புநிலமாக இருந்த இடம், காய்ந்து, வெடித்து, பல மாற்றங்களுக்குப் பிறகு பரந்த பாலைவனமானது. நாடோடிகள் முதலில் கூடாரம் அமைத்துப் பார்த்தார்கள். ஆனால் வாழ முடியாமல் பின்பு வேறு இடம் தேடிச் சென்றுவிட்டார்கள். இந்தப் பாலைவனத்தின் முதல் தலைமுறை மைந்தர்களாக வந்தவர்கள் பனியாஸ் மக்கள். இன்றும் துபாயை ஆண்டு கொண்டு இருப்பவர்கள் பனியாஸ் பழங்குடி இனத்தவர்கள். மத்தியக் கிழக்கில் உள்ள நாடுகளுக்கெல்லாம் எண்ணெய் வளத்தை அள்ளிக் கொடுத்த இறைவன் துபாய்க்கு மட்டும் கிள்ளித்தான் கொடுத்தான். ஆனால் ஏராளமாக எண்ணெய் வளம் உள்ள நாடுகளெல்லாம் பின் தங்கி நிற்க, துபாய் மட்டும் விண்ணளாவ வளர்ந்து நின்றது எப்படி? அரபு மண்ணில் எங்கு கால் வைத்தாலும் ஏதோ ஒரு பிரச்னை. ஏதேதோ அரசியல், அக்கப்போர்கள், உள்நாட்டுப் போர்கள். துபாய் மட்டும் எப்படி எப்போதும் சொர்க்கபுரியாகவே இருக்கிறது?...