நஸீமா ரஸாக் Archives - Page 2 of 3 - Naseema Razak
162
archive,paged,tag,tag-162,paged-2,tag-paged-2,wp-theme-bridge,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,transparent_content,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

பல வருடங்களுக்குப் பின் இதை மீண்டும் கையில் எடுத்தேன். கிரெசண்ட் கல்லூரியில் எம்.சி.ஏ முடிக்கும் இறுதி ஆண்டு சிறந்த ப்ரோஜெக்ட்காக முதல் இடம் கிடைத்தது. அதற்கு விழா வைத்துத் தங்கப் பதக்கம் கொடுத்தார்கள். முதல் ரேங் எடுக்கும் மாணவி அல்ல நான். ஆனால் முயற்சிகளுக்கு என்றும் முற்றுப் புள்ளி வைத்ததில்லை. ஐந்தாவது செமெஸ்டரில் ஐ.டி.சி பேப்பரில் அரியர் வந்துவிட்டது....

சதுப்புநிலமாக இருந்த இடம், காய்ந்து, வெடித்து, பல மாற்றங்களுக்குப் பிறகு பரந்த பாலைவனமானது. நாடோடிகள் முதலில் கூடாரம் அமைத்துப் பார்த்தார்கள். ஆனால் வாழ முடியாமல் பின்பு வேறு இடம் தேடிச் சென்றுவிட்டார்கள். இந்தப் பாலைவனத்தின் முதல் தலைமுறை மைந்தர்களாக வந்தவர்கள் பனியாஸ் மக்கள். இன்றும் துபாயை ஆண்டு கொண்டு இருப்பவர்கள் பனியாஸ் பழங்குடி இனத்தவர்கள். மத்தியக் கிழக்கில்...

சிலருக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்றால் இடம் மாற்றம் தேவை. வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அது சொகுசாகத் தெரியும். ஆனால் அவர்களுக்கு அது தேவையாக இருக்கும். முக்கியமாகப் படைப்புச் சார்ந்த வேலைகளில் இருப்பவர்களிடம் இந்த குணத்தை பார்க்கலாம். மாடமாளிகை இல்லை என்றாலும் ஒரு மாற்றம், ஒரு தனிமை. ஆனால் பிரிட்டிஷ் எழுத்தாளர் இயன்...

வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதை விடப்பெரிய தகுதியாகப் பொறுமை இருக்க வேண்டும். இதெல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் சிலர் வாழ்க்கையில் எடுத்த எடுப்பில் வெற்றி கிடைத்துவிடும். கிடைத்த வெற்றியைத் தக்க வைப்பது என்பது வெற்றிபெற உழைப்பதை விடப் பெரிய வேலை. காஜு இஷிகுரோ என்ற...

1927 ஆம் ஆண்டு சிகாகோ நகரிலொரு பத்து வயதுச் சிறுவன் தான் எழுதிய கவிதைத் தாளோடு சுற்றிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் முகத்தில் சந்தோஷத்தின் குதூகலம். கவிதைத் தாளிற்குப் பதில் கையில் பத்து டாலர் இருந்தது. அவனுக்குக் கிடைத்த முதல் சம்பளம் அது. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு சம்பாதித்தான். அதிகமாக நாடகக்...

ஆரம்பப் படிப்பு முடிந்ததும் மார்க்ஸ் ட்ரியரிலிருந்து உயர் தரப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான். அப்பொழுது அவனுக்கு வயது பன்னிரண்டு. சரியாக ஐந்து வருஷ காலம் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தான். லத்தீன், ஜெர்மன்,கிரீக்,பிரெஞ்சு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றான். இவனுடைய கவிதா சக்தியும் வளர்ந்து வந்தது. அதே சமயத்தில் இவனுடைய மனமும் பண்பாடு பெற்று வந்தது. தன்னுடைய எதிர்கால...

எனக்கு அறிமுகமான காலம் தொடங்கி இணையத்தில் நிறையப்பேர் புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இணையம் பிறப்பித்த எழுத்தாளர் என்று பேயோனைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அவர் மக்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்; ட்விட்டருக்காகப் புனைபெயரில் எழுதுகிறார் என்று பலபேர் சொன்னார்கள். ஜெயமோகன் தொடங்கி, கோணங்கி வரை பலபேரது பெயர்கள் பேயோனுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டுக் கைவிடப்பட்ட கதை அநேகமாக...

துபாய் என் புகுந்த வீடு. இந்த வீட்டுக்கு நான் ஒரு நல்ல மருமகள். இங்கு வந்த காலம் முதல் நான் பார்க்கும்-என்னை பாதிக்கும் ஒவ்வொன்றையும் மெட்ராஸ் பேப்பரில் அவ்வப்போது எழுதி வருகிறேன். இந்தக் கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்துப் படித்துப் பார்க்கும்போதுதான் ஒரு நிலப்பரப்பு நம்மையறியாமல் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் எப்படிப்பட்டது என்பது புரிகிறது. என்னுடைய துபாய் கட்டுரைகளின்...

இன்றைய பதின்பருவக் குழந்தைகள் பிரச்சனைகள் சூழ்ந்த உலகில் மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். 'நீல் & ஹீல்' (Kneal & Heal) முதலில் செவிமடுத்து பிரச்சனையைக் கேட்டு உள்வாங்கி , அவற்றை(ஹீலிங்) குணப்படுத்துதல். நூலாசிரியர் உளவியல், தியானம், ஹீலர் என குழந்தைகள் உலகில் ஒரு ஆலோசகராக அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கண்டு கேட்ட உணர்ந்த சம்பவங்களே இந்தத் 'தளிர்' . இக்கதையின்...

நாளது வரை பார்க்காத, அனுபவிக்காத எல்லாவற்றையும் கடந்து, பெருமூச்சு விட்டபடிதான் 2022-ம் ஆண்டின் தொடக்கம் அமைந்தது. நான்கு வருடங்களாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த ‘பிரைனோ கிட்’ என்ற என் நிறுவனத்தை இழுத்துச் செல்ல பேய்ப் பலம் தேவையாக இருந்தது. முதலிலிருந்து ஆரம்பிக்க மனமும் தயாராகிக் கொண்டிருந்தது. என் நிறுவனமானது நடனம், பாட்டு, இசை, பள்ளிப் பாடங்களுக்கான டியூஷன்,...