பொன் விளைந்த பூமி, வாசிப்பு – ராஜா ஹஸன்
அமீரகத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் எழுத்தாளர் நஸீமா ரஸாக், துபாய் தேசம் உருவானதைப் பற்றி எழுதிய வரலாற்று நூல். இன்று உலகின் சொர்க்க புரியாகத் திகழும் துபாய் அந்த நிலையை எவ்வாறு அடைந்தது எண்ணைய் வளம் மிகவும் குன்றிய ஒரு நாடு .பிற அரபு தேசங்களை விட முன்னணியில் சொல்லப்போனால் உலகிலேயே முன்னேறிய நாடுகளில் துபாய் நகரம் இடம் பெற்ற விதம் குறித்த சரித்திர பூர்வ தகவல்களுடன் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. மணல் சூழ்ந்த அரேபிய நிலம் அதிலிருந்து நாடுகள் ,யூத, கிறிஸ்தவ மதங்களைத் தொடர்ந்து இஸ்லாம் பரவிய விதம் என பண்டைய வரலாற்றிலிருந்து துவங்கும் நூலாசிரியர் படிப்படியாக 1800களில் அந்த தேசங்களின் நில அமைப்பு வாழ்க்கை என்று எழுதிச் செல்கிறார். 1800களில் கிழக்கிந்திய கம்பெனியினர் பம்பாயிலிருந்து பாஸ்லாவிற்கு செல்லும் கடல் வழியாக நிலப்பரப்பை கைப்பற்றுகின்றனர். அவர்களுக்கும் கடற்கொள்ளையர்களுடன்...