Home - Naseema Razak
5
paged,wp-singular,page-template,page-template-blog-small-image,page-template-blog-small-image-php,page,page-id-5,paged-8,page-paged-8,wp-theme-bridge,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,transparent_content,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

நம் அனைவருக்கும் அரபிப் பெண்களைப் பற்றி பல அபிப்ராயங்கள் உண்டு. கல்வி இல்லாதவர்கள். விரைவில் திருமணம் நடந்துவிடும். அடிப்படைவாதத்தால் அல்லல் படுகிறவர்கள். இவை அனைத்தும் உண்மைதானா? சவூதி அரேபியப் பெண்கள் மட்டும் அரேபியர்களா?வேறு அரபிப் பெண்கள் இருக்கிறார்களா?இப்படிப் பல சுவாரஸ்யமான தகவல்கள்...

பயணம் செய்யும்போது பல முறை மயானங்களைக் கடந்து இருக்கிறேன். ஒருவிதமான அச்சம்தான் அப்பொழுது இருந்தது. ஒரு வேளை அன்றைய வயது காரணமாக இருந்திருக்கலாம். சமீபத்தில் எங்கள் நெருங்கிய உறவினர் காலம் சென்றார். மிகச் சாந்தமான நல்ல மனிதர். அவ்வப்போது அவரை நினைத்துக்கொள்வதும் உண்டு. இன்றோடு நாற்பது...

முதலில் குப்புறப் படுத்தது, முதலில் எழுந்து நின்றது, முதல் நடை, முதலில் விழுந்து முட்டி சிராய்த்தது - இதெல்லாம் நமக்கு நினைவிருக்காது. நம் பெற்றோருக்கு இருக்கும். நமக்கு முதல் திருட்டுத்தனம் நினைவிருக்கும். முதல் காதல் நினைவிருக்கும். முதல் தோல்வி, முதல் வெற்றி...

வாழ்க்கையில் சில தருணங்கள் மன நிறைவைத் தரும். அப்படியொரு நிகழ்வு சென்ற வாரம் நடந்தது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கும் தன்னார்வலர்களோடு சேர்ந்தேன். திருச்சிக்கு அருகில் உள்ள புதுர்பாளையத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில், 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...