ஸ்டீபன் கிங்
எல்லாருக்கும் சரியான அம்மா அப்பா கிடைத்துவிடுவதில்லை. அவனுக்கும் அப்படி தான். இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே அப்பா என்ற கதாபாத்திரம் ஓடிப் போனது. ஓடிப்போனவன் தெரிந்தோ தெரியாமலோ உருப்படியான வேலையைச் செய்திருந்தான். பெட்டி நிறைய ஃபேண்டஸி ஹாரர் புத்தகங்களை வீட்டில் வைத்துவிட்டுப் போனான். இரண்டு வயதுக் குழந்தைக்கு ஐந்து வயதானது. பொம்மை இல்லாத வீட்டில் அந்தப் பெட்டிதான் எல்லாம். புத்தகங்களோடு விளையாட ஆரம்பித்த குழந்தை நியாயமாகக் கிழித்து இருக்க வேண்டும். ஆனால் வாசித்து முடித்தது. ஏழு வயதில் கதை எழுதத் தயாரானான். பன்னிரண்டு வயதில் பள்ளி மாத இதழ் ஒன்றில் அவன் கதையும் வெளிவந்தது. பேய் படம் பார்ப்பதும்,சைன்ஸ் பிக்சன் படங்கள் பார்க்கும் பழக்கமும் அவனோடு சேர்ந்து வளர்ந்தது. கல்லூரி படிப்பும் முடிந்தது. ஆங்கிலத்தில் பட்டம். பட்டம் பெற்ற அடுத்த ஆண்டு திருமணம். பள்ளியில் ஆசிரியர் பணி .மூன்று குழந்தைகள் என்று சராசரி வாழ்க்கை. கிடைக்கும் சம்பளத்தில் அனைத்தையும் சமாளிக்க முடியவில்லை. எத்தனையோ பகுதி நேர வேலைகள் கைவசம் இருந்தன. ஆனால் எழுதுவதில் மனம் நின்றது. எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான...