23 Dec தளிர் – நாவல் அறிமுகம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரப் போகும் #தளிர் நாவல் அறிமுகம். நன்றி Pa Raghavan சார். பல வருடங்களுக்கு முன்பு மெல்லினம் என்றொரு நாவலை எழுதினேன். கல்கியில் அது தொடராக வந்தது. இரண்டு குழந்தைகள். ஒரு நாய். ஒரு குரங்கு. ஓர் அணில். ஒன்றிரண்டு பட்டாம்பூச்சிகள். இவ்வளவுதான் கதாபாத்திரங்கள். வாரப் பத்திரிகையில் இம்மாதிரியான கதையெல்லாம் எடுபடுமா என்று அங்கே யாரும் சந்தேகப்படவில்லை. வெளியாகி முடிந்ததும் வாசகர்களும் தலைமேல் வைத்துக் கொண்டாடித் தீர்த்தார்கள். (இன்றைய எனது எடையில் சுமார் பத்து கிலோ அப்போது ஏறியதாக இருக்கும்.) அது ஒரு சிறிய சூட்சுமம்தான். குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரியவர்களுக்குக் கதை சொல்லும்போது குழந்தைத்தனமாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வது ஒன்றுதான் பணி. அதைச் சரியாகச் செய்தால் போதும். வென்றுவிடும். மெல்லினத்துக்குப் பிறகு அம்மாதிரியான முயற்சிகள் ஒன்றிரண்டு நடந்தன. பெரிய அளவில் எடுபடவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு இப்போது...