புது வரவு- சூஃபி ஆகும் கலை
#தளிர் நாவல் முடித்து, மூச்சு விடும் நேரத்தில், இப்படி ஒரு காரியத்தை ஜின் செய்யாமல் இருந்திருக்கலாம் . ஒரு நாவலை முழுதாக முடிக்க நான் பட்ட பாடு என் முதுகுக்கும் , மருத்துவருக்கும் தான் வெளிச்சம். அதற்குள் என் கையை இழுத்துக் கொண்டு கணினியோடு கட்டுவது எல்லாம் அராஜகம் . நாவலை முடித்திருந்த ,கொண்டாட்ட மனநிலையை எப்படி மாற்றியது என்று யான் அறியேன். மனம் எதையோ தேட ஆரம்பித்தது .”எதை நீ தேடுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்று உணர்ந்த தருணம் . தேடலில் மூழ்கி மூச்சு முட்டும் போது, கை தானாகக் கணினியைப் பற்றிக் கொண்டது. அப்படி உருவானது தான் “சூஃபி ஆகும் கலை “. நான் மூழ்கி எடுத்தவற்றை உங்களுக்காக எழுத்துக்களால் கோர்த்து உள்ளேன். வரும் சென்னை புத்தகக் காட்சியில் வெளிவரும் இரண்டு புத்தகங்களின் அட்டைப்படங்கள் கிடைத்து...